எனது அறையை அனைவரும் பார்க்கும்படிதான் வைத்திருப்பேன்... அண்ணாமலை அதிரடி..!

Published : Aug 26, 2021, 01:57 PM ISTUpdated : Aug 28, 2021, 09:18 AM IST
எனது அறையை அனைவரும் பார்க்கும்படிதான் வைத்திருப்பேன்... அண்ணாமலை அதிரடி..!

சுருக்கம்

பாஜக அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்... என்கிற தலைப்பில் 40 நிமிட காணொளியை வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருக்கிறார். 

பாஜக அண்ணாமலை ஆடியோக்கள்; சிக்கும் போலி சிங்கம்... என்கிற தலைப்பில் 40 நிமிட காணொளியை வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி இருக்கிறார். 

பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் மீது பாலியல் வீடியோ விவகாரத்தை வெளியிட்டு இருந்தார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன். இதனையடுத்து கே.டி.ராகவன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனையடுத்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இது குறித்து விசாரணை நடத்தப்படும். ஆனால் பாஜக, மதனுக்கும், வெண்பாவுக்கும் பாதுகாப்பு சம்பந்தமாக எந்த உத்தரவாதமும் தராது. அவரவர் செய்த செலுக்கு அவரவர்களே பொறுப்பு என அறிவித்து இருந்தார். இந்நிலையில் பாஜக தலைவர்களின் பாலியல் ரீதியான புகார்களை விசாரிக்க மலர்கொடி தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இதனையடுத்து பாஜகவில் உறுப்பினராக இருந்த மதன் ரவிச்சந்திரனும், வெண்பாவும் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மதன் டையரி என்கிற யூடியூப் பக்கமும் முடக்கப்பட்டது. தற்போது மதன், பாஜக தலைவர் அண்ணாமலை மற்றி பற்றிய தகவல்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். 

அதில், ‘’கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலைதான் வெளியிடச் சொன்னார். நானும் பெண் குழந்தைகளெல்லாம் வைச்சிருக்கேன். இந்த வீடியோவை போட்டு விட்டுவிடுங்கள்னு சொல்றான். இப்படி பேசி வழியனுப்பி வைத்த ஒருத்தன் 12 மணி நேரத்தில் மாற்றி அறிக்கை வெளியிடுகிறான் என்றால் இவனை எல்லாம் எப்படி நம்புவது.?’’எனக்கூறும் மதன், இடையிடையே அண்ணாமலையுடன் பேசிய ஆடியோக்களையும் வெளியிட்டுள்ளார். கே.டி.ராகவன் வீடியோவை வெளியிடச் சொன்னதே இந்த அண்ணாமலைதான்’’ என மதன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 உங்களுக்கு 2026 தேர்தலில் எம்.எல்.ஏ சீட் தரேன், கட்சில இலக்கியப்பிரிவு/ தமிழ் வளர்ச்சிப்பிரிவுல பதவி தரேன். இந்த வீடியோ மேற்கொண்டு வெளிய வரக்கூடாது. நான் பாஜக தலைவர் ஆனதும் முதல்வேலையாக இந்த தலைவர் அறையில் இருக்கும் கதவுகளை, மாத்தினேன், ஏன்னா இந்த ரூம்ல அப்படி பல வேலை நடந்துருக்கு. குஷ்பு, காயத்ரி ரகுராம் இப்படி யார் வந்தாலும் கூட ஆள் இல்லாம நான் தனியா பேசுறதே இல்லை. BJP ஒரு நல்ல கட்சி. கம்முனு இருந்தாப்போதும், கட்சிமேலிடம் முட்டாள்த்தனமா பேசினாலும் சப்போர்ட் பண்ணினா போதும், நமக்கு வளர்ச்சி, பதவி நிச்சயம்’’ என அண்ணாமலை பேசிய ஆடியோக்களை வெளியிட்டு இருக்கிறார் மதன். 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!