ஹனி ட்ராப்பில் சிக்கிய ராகவன்.. அண்ணாமலை தான் காரணமா.?? ஆண்டவன் இருக்கிறான், குமுறிய கேடிஆர்.

By Ezhilarasan BabuFirst Published Aug 26, 2021, 1:11 PM IST
Highlights

மேலும், அந்த வீடியோ எனக்கு எதிராகவும், நான் சார்ந்துள்ள கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வெளியிடப்பட்டது என ஏற்கனவே அவர் கூறியுள்ளார். வீடியோவில்  இருப்பது நீங்கள் இல்லையென்றால் ஏனெனில் ஏன் சார் பதவி விலகுனிங்க என்று கேட்டதற்கு, ஒரு சாதாரண வழக்கறிஞராக அறியப்பட்டேன், 

ஹனி ட்ராப்பில் சிக்கினாரா கே. டி ராகவன் என ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையே இந்த வீடியோ வெளியிட காரணமாக இருந்த விட்டாரா என்ற கேள்விக்கு அது ஆண்டவனுக்கு தான் தெரியும் என ராகவன் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர்  கே.டி ராகவன்.இவர் வழக்கறிஞராக இருந்து படிப்படியாக கட்சியில் பதவி உயர்ந்தவர் ஆவார். ஒழுக்கம் நிறைந்தவராகவும்,  டீசண்டான மனிதராகவும் கட்சிகள் வலம் வந்தவர் ராகவன். 

இந்நிலையில் அதே கட்சியை சேர்ந்த மதன் ரவிச்சந்திரன் என்பர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  ராகவனுக்கு எதிராக வெளியிட்ட ஆபாச வீடியோ தமிழக பாஜகவை நிலைகுலைய செய்துள்ளது. அதில் அரை நிர்வாணத்துடன் பெண் ஒருவருடன் கே.டி ராகவன் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதே அதற்கு காரணம். தனக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாநில பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விவாதங்களில் ஊடகங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக திட்டமிட்டு ராகவன் பழி தீர்க்கும் நோக்கில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு இருக்கிறது என்றும், இது ஸ்டிங் ஆபரேஷன் அல்ல ஒரு வகையான ஹனி டிராப் சதி என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். 

ஹனி டிராப் என்பது, காலம் காலமாக இருந்து வருகிற ஒரு பொறி முறை, அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வீக்னஸ் இருக்கும், சிலருக்கு பணத்தின் மீது ஆசை இருக்கும், சிலர் மதுவிற்கு அடிமையாக இருப்பார்கள், சிலருக்கு பெண்ணாசை இருக்கும், அப்படி யாருக்கு எந்த வீக்னஸ் இருக்கிறதோ அந்த வீக்னஸை வைத்து அவர்களை வலையில் சிக்க வைப்பதுதான் இந்த ஹனி ட்ராப். பெண்ணாசை  உள்ளவர்கள் எனில் கவர்ச்சியான ஒரு பெண்ணை அவர்களிடத்தில் பழக வைத்து, அது தொடர்பான வீடியோ எடுத்து அவர்களிடத்தில் இருந்து ரகசியத்தை கறப்பதுதான் ரியல் ஹனி டிராப் என்கின்றனர். அந்த வகையில்தான் இப்போது ராகவன் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. தன் மீது குற்றச்சாட்டு எழுந்த காரணத்தினால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில்  அவருக்கு நெருக்கமானவர்கள் சிலர் அவரிடத்தில் பேசியதாகவும் அப்போது அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், அந்த வீடியோ எனக்கு எதிராகவும், நான் சார்ந்துள்ள கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே வெளியிடப்பட்டது என ஏற்கனவே அவர் கூறியுள்ளார். வீடியோவில்  இருப்பது நீங்கள் இல்லையென்றால் ஏனெனில் ஏன் சார் பதவி விலகுனிங்க என்று கேட்டதற்கு, ஒரு சாதாரண வழக்கறிஞராக அறியப்பட்டேன், ஆனால் எனக்கு பாரதிய ஜனதா கட்சி பொதுச்செயலாளர் என்ற பொறுப்பை வழங்கியது. எனவே  என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பழி எனது கட்சியை பாதித்து விடக்கூடாது என்பதனால்தான் நான் ராஜனமா செய்தேன் என அவர் கூறியதாகவும், அதேபோல இந்த வீடியோ வெளியானதற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒரு காரணமென கருதுகிறீர்களா என கேட்டதற்கு அது அந்த ஆண்டவனுக்கு தான் தெரியும் என  அவர் ஒற்றை வரியில் பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!