அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

Published : Aug 26, 2021, 01:05 PM IST
அமைச்சர் பொன்முடியின் மகனுக்கு திடீர் நெஞ்சுவலி? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!

சுருக்கம்

கடந்த வாரமும் கவுதம சிகாமணி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கோட்டையில் இருந்தார். அவர் தகவல் கிடைத்ததும் உடனடியாக, மருத்துவமனைக்கு கிளம்பி சென்றார். 

திமுக எம்.பி.யும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கவுதம சிகாமணி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இவரது மகன் டாக்டர் கவுதம சிகாமணி. கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில், சென்னையில் இருந்த கவுதம சிகாமணிக்கு நேற்று திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனே அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீவிர சிகிச்சை பிரிவில் கவுதம சிகாமணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதயத்தில் பிரச்சனை இருக்கிறதா என்பது குறித்து மருத்துவர்கள் தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த வாரமும் கவுதம சிகாமணி உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அமைச்சர் பொன்முடி கோட்டையில் இருந்தார். அவர் தகவல் கிடைத்ததும் உடனடியாக, மருத்துவமனைக்கு கிளம்பி சென்றார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!