
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், தன் மது கடைகளில், பீர் மற்றும், ஐ.எம்.எப்.எல்., எனப்படும், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அந்த கடைகளில், தினமும், 80 கோடி ரூபாய்... விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகளும் விற்பனையாகின்றன. சபரிமலை சீசனால், இரு மாதங்களாக, டாஸ்மாக் விற்பனை குறைவாக இருந்தது.
கடந்த புத்தாண்டு தினத்தின் போது, செல்லாத நோட்டு அறிவிப்பால், பணப்புழக்கம் குறைவாக இருந்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில், வழக்கமான விற்பனை தான் இருந்தது. கூடுதல் விற்பளை எதுவும் நடைபெறவில்லை.
மழை மற்றும் சபரிமலை சீசன் போன்ற காரணங்களால், நவம்பர் முதல் தற்போது வரை, மது விற்பனை சற்று குறைவாக உள்ளது. கிறிஸ்துமஸ் துவங்கி, ஆங்கில புத்தாண்டு வரை, மது விற்பனை நன்றாக இருக்கும். இதனால், கடைகளுக்கு, ஏழு நாட்களுக்கு தேவையான மது வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் , 31 ஆம் தேதியன்று புத்தாண்டு விற்பனைக்காக, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகளை, விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுது. . அதற்காக, கூடுதலாக, 'பீர்' வகைகள் கொள்முதல் செய்யப் பட்டு, கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புத்தாண்டிற்கு, மது விலையை உயர்த்தி விற்போர் மீது, உணவு பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கம் முதலமைச்சர் உடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.