
ஹெச்.ராஜாவை வெறுப்பேற்றும் விதமாக விஜய்க்கும் அவரது குடும்பத்திற்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் விஜய்யும் நேற்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆனால், சில நிமிடங்களில் அந்த வாழ்த்துப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.
தளபதி ஏன் இப்படி செய்தார்? அவரை மெர்சல் பட சர்ச்சையின் போது ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு பாஜக தலைவர்கள் சிலர் பேசினர். எனவே தன் மீது கிறிஸ்துவர் என்ற முத்திரை பதியாமல் இருக்கவே அவர் அந்தப் பதிவை நீக்கியிருப்பாரோ? என விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில், விஜய்யே கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தெரிவித்து, பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டு அமைதி காத்துவர நடிகை தன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “விஜய் சார், அவரது குடும்பம் மற்றும் அவருடைய அன்பான ரசிகர்களுக்கு என்னுடைய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்” என்று தெரிவித்திருப்பதுடன், நம்பிக்கையூட்டும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
நடிகை தன்ஷிகா ஏன் விஜய்க்கு மட்டும் தன்ஷிகா தனிப்பட்ட முறையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆனால் தளபதிக்கு ஆதரவாக ஹெச். ராஜாவை கலாய்க்கத்தான் இப்படி செய்துள்ளார் என ரசிகர்கள் புரிந்து கொண்டு ரீ டிவீட் செய்து வருகின்றனர்.