1 Year Of CM Stalin: முதல்வராக ஓராண்டு..! என்ன செய்தார் மு.க.ஸ்டாலின்..?

Published : May 07, 2022, 07:44 AM ISTUpdated : May 07, 2022, 09:51 AM IST
1 Year Of CM Stalin: முதல்வராக ஓராண்டு..! என்ன செய்தார் மு.க.ஸ்டாலின்..?

சுருக்கம்

தமிழகத்தில் கடந்த  2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து இன்று முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத்தில் கடந்த  2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடந்தது. மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், திமுக கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றன. அதிமுக-பாஜக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து, கொரோனா காலகட்டம் என்பதால் மே 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர், தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வர் பொறுப்பை ஏற்ற மு.க.ஸ்டாலின், பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் கடந்த ஓராண்டில் செயல்படுத்தினார்.

* திமுக அரசு பதவி ஏற்ற நாளில் கொரோனா உச்சத்தில் இருந்தது. கொரோனா என்ற அந்த கொடிய நோய்க்கு ஓரளவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

* தடுப்பூசி செலுத்துவதை மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவே மாற்றினார். 

* கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கவச உடை அணிந்து கொரோனா நோயாளியிடம் முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  

*  தமிழகத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்.

*  கொரோனா காலத்தில் நிவாரண நிதியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து 4000 ரூபாய்

*  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. 

*  கொரோனா கால நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் தரப்பட்டது. 

*  பொங்கல் பரிசாக 22 மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.  

*  ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார். 

*  சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

*  பொது பட்ஜெட்டும், வேளாண் பட்ஜெட்டும் காகிதம் இல்லாத மின்னணு பட்ஜெட்.

*  கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் ரத்து.

*  விபத்தில் காயம் அடைந்தவருக்கு முதல் 48 மணி நேர இலவச சிகிச்சை அளிக்கும் 'இன்னுயிர் காப்போம்' மருத்துவ திட்டம் என ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். 

இந்நிலையில், முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார். பின்னர், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். அதன்பின் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!