முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்; பாஜக செயற்குழு கூட்டத்தில் போடப்பட்ட 9 தீர்மானங்கள் - அண்ணாமலை அதிரடி!

By Raghupati R  |  First Published Jan 20, 2023, 10:08 PM IST

கடலூரில் இன்று பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.


தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜகவை சேர்ந்த மாவட்டச் செயலாளர் முக்கிய நிர்வாகிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். 

இதில் மேலும் குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச். ராஜா, மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏக்கள், தமிழகத்தை சேர்ந்த தேசிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படும் வகையில் பூத் கமிட்டியை பலப்படுத்துவது, கட்சிக்கு நிதி சேர்ப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் வேங்கை வயல் சம்பவத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும், ராமர் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் ஏப்ரல் மாதம் நடை பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து தமிழக பாஜக செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் பின்வருமாறு, 

1.தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசியல் சாசன வரம்பை மீறி ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த அராஜகத்தை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.

2.சேது கால்வாய் திட்டம் அமைக்கப்படும் பொழுது ராமர் பாலம் பாதிக்கப்படாமல் அமைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம்.

இதையும் படிங்க..2000 ஆண்டு பழமை! மழைக்காடுகளுக்கு உள்ளே புதைந்து கிடந்த மாயன் நகரம் - எங்கு இருக்கு தெரியுமா?

3.காசி தமிழ் சங்கத்தை தந்த பிரதமருக்கு தீர்மானத்தில் பாராட்டு.

4.புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராம பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டி தீர்மானம்.

5.பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்ற சம்பவங்களில் இருந்து காக்க தவறிய திமுக அரசை கண்டித்து தீர்மானம்.

6.ஒவ்வொரு பொங்கல் பண்டிகை பொழுதும் பொங்கல் பரிசாக கரும்பு வழங்குவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு பாஜக போராட்டத்திற்கு பிறகு கரும்பு வழங்கப்பட்டது அதை கண்டித்து தீர்மானம்.

7.திமுக ஆட்சியில் தமிழகம் தொழில் வளர்ச்சித் துறையில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டது குறித்து தீர்மானம். 

8.ஆளுநர் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம். 

9.பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நட்டாவிற்கு பாராட்டி தெரிவித்து தீர்மானம்.

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

click me!