பிரதமரே ஓட்டு கேட்டாலும்.. ஈரோட்டில் அண்ணாமலைக்கு 5 ஆயிரம் வாக்கு தேறாது! கொளுத்திப்போட்ட கிஷோர் கே ஸ்வாமி

By Raghupati RFirst Published Jan 20, 2023, 5:25 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.பிறகு இதனை அடுத்து, இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எதிபார்த்தது போலவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இரட்டை இலை சின்னத்தில்தான் இந்த தொகுதியில் போட்டியிட்டு இருந்தது.

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

இதனால், அந்தக் கட்சியே மீண்டும் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக விரும்பியதால் அந்தக் கட்சியே போட்டியிட இருப்பதாக ஜிகே வாசன் அறிவித்தார். இது இப்படி இருக்க அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தேர்தல் குழு ஒன்றை அமைத்து சலசலப்பை ஏற்படுத்தியது. பாஜக கட்சி தனியாக வேட்பாளரை அறிவிப்பார்களா ? அதற்கு தான் தேர்தல் குழுவை அமைத்துள்ளார்களா ? என பல கேள்விகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வலதுசாரி பேச்சாளரும், பாஜக ஆதரவாளருமான கிஷோர் கே ஸ்வாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு தமிழக பாஜகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.அவர் வெளியிட்டுள்ள பதிவில், நரேந்திர மோடி அவர்களே பிரச்சாரம் செய்து அண்ணாமலையே போட்டியிட்டாலும் ஈரோடு கிழக்கில் 5000 வாக்குகள் தேறாது என்பது தான் எதார்த்த உண்மை , யார் என்ன கம்பு சுத்தினாலும் , எதார்த்தத்தை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த சில வாரங்களாக தமிழக பாஜகவையும், அண்ணாமலையையும் விமர்சித்து வந்த நிலையில் மீண்டும் இப்படியொரு பதிவு தமிழக பாஜகவினரிடமும், குறிப்பாக அண்ணாமலை ஆதரவாளர்களிடமும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

நரேந்திர மோடி அவர்களே பிரச்சாரம் செய்து அண்ணாமலையே போட்டியிட்டாலும் ஈரோடு கிழக்கில் 5000 வாக்குகள் தேறாது என்பது தான் எதார்த்த உண்மை , யார் என்ன கம்பு சுத்தினாலும் , எதார்த்தத்தை மறுக்க முடியாது

— kishore k swamy 🇮🇳 (@sansbarrier)

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

click me!