தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

By Raghupati RFirst Published Jan 20, 2023, 2:55 PM IST
Highlights

காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ், அதிமுக,பாஜக, நாம் தமிழர் என பல கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

இதையடுத்து நடந்து முடிந்த இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.பிறகு இதனை அடுத்து, இடைத்தேர்தலை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ந்த தேர்தலில் யார் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.

அதன்படி அதிமுக கூட்டணி சார்பில் ஏற்கெனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த தமாகவுக்கு இந்த வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் அதிமுகவின் மூத்த தலைவர்களான ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமாக தலைவர் ஜி.கே. வாசனை சந்தித்து பேசினர்.ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவே போட்டியிடும் என முடிவு செய்ததாக ஜிகே வாசன் அறிவித்திருந்தார்.


இதையும் படிங்க..தேசிய கட்சிகளில் அதிக வருமானம் பெற்ற கட்சி பாஜக.. திமுகவும் லிஸ்ட்ல இருக்கு! எத்தனையாவது இடம் தெரியுமா?

 அது போல் திமுக சார்பில் ஏற்கெனவே கடந்த முறை போட்டியிட்டு வென்ற காங்கிரஸ் கட்சியே இந்த முறையும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிட வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட்ட நிலையில், தற்போதைய இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. இந்நிலையில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. நிச்சயம் இரட்டை இலையில் தான் போட்டி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.நாம் தமிழர் கட்சியும் போட்டியிடும் என சீமான் அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணி, பாஜக, அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளும், இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. போனமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதியை தற்போது அவர்களிடம் இருந்து பெற்று அதிமுகவே களமிறங்குகிறது. இது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை காட்டுகிறது என்று கூறுகின்றனர் எடப்பாடி தரப்பு. அதேபோல தமிழக பாஜக தேர்தல் குழு அமைத்ததும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

அதிமுக கூட்டணியில் இருந்த தமாகவிடம் இருந்து தொகுதி பெற்று எடப்பாடி பழனிசாமி ஒருபக்கம் காய் நகர்த்தினால், மற்றொரு பக்கம் அதன் கூட்டணியில் ஒன்றான பாஜக தனியாக தேர்தல் குழு அமைத்திருப்பது கூட்டணிக்குள் அதிருப்தியை மட்டுமல்ல அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், ஓபிஎஸ் தரப்போ எந்தவித அறிவிப்பும் இல்லாமல், ஆலோசனை நடத்தி வருகிறார்கள். உண்மையான அதிமுக நாங்கள்தான், எங்கள் பக்கம் அதிமுக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி சூப்பர் பிளானை போட்டு கூட்டணி கட்சியுடம் இருந்து தொகுதியை கைப்பற்றியுள்ளார்.

இது எடப்பாடி பழனிசாமி தான் ஒரு ஆளுமை என்று நிரூபித்துவிட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ எந்த அறிவிப்பும் இல்லாமல் இருப்பது அவர்களது ஆதரவாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ அதிமுக இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுமா ? அதற்கு எதிராக ஓபிஎஸ் எந்த முட்டுக்கட்டை போடுவாரோ என்ற பரபரப்பில் அதிமுக இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..ரஃபேல் வாட்ச் மன்னன்! ஈரோடு தேர்தல் - சவாலுக்கு நீங்கள் தயாரா அண்ணாமலை? வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்!

click me!