ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் போட்டியா? அவரே சொன்ன பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Jan 20, 2023, 1:20 PM IST
Highlights

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஜனவரி 27ம் தேதி நல்ல செய்தி சொல்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக உள்ளது. இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது பற்றி 27ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 3 மாநில சட்டப்பேரவை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அதிமுகவே போட்டியிட உள்ளது. காங்கிரஸ் மற்றும்  அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக வேட்பாளர் இவரா? வெளியான தகவல்..!

இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஈரோடு கிழக்கு தொகுதி நிர்வாகிகளுடன் அமமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்;- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஜனவரி 27ம் தேதி நல்ல செய்தி சொல்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக உள்ளது. இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் விரும்புகிறார்கள். 

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டி.. விட்டுக்கொடுத்த ஜி.கே.வாசன்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நான் கூட போட்டியிடலாம், எனக்கு அந்த தைரியம் உள்ளது. தேர்தலை கண்டு எனக்கு பயமில்லை. தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் நினைத்தால் எல்லாம் நடக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே சமரசம் ஏற்பட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. இரட்டை இலையை மட்டுமே அதிமுகவினர் நம்பி உள்ளதாக தினகரன் கூறியுள்ளார். 

click me!