நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. மாற்றுத் திறனாளியிடம் மதிமுக எம்எல்ஏ ஆணவப் பேச்சு.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 2:09 PM IST
Highlights

மூன்று சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் அல்ல என  ஆவேசமாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

மூன்று சக்கர வாகனம் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி ஒருவரிடம் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் நான் ஒன்றும் உன் வீட்டு வேலைக்காரன் அல்ல என  ஆவேசமாக பேசியுள்ள ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  அந்த மாற்றுத்திறனாளி தன்னை அடிக்கடி தொல்லை செய்து வந்ததால்தான் தான் அப்படி பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 

திமுகவுக்கு எதிராக  அரசியல் செய்து வந்த மதிமுக ஒரு கட்டத்தில் அனைத்து தேர்தல்களிலும் படுதோல்வியை சந்திக்கும் நிலைக்கு ஆளானது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கட்சிக்கு பிரதிநிதித்துவம் எதுவுமில்லாமல் இருந்து வந்தது, அதனால் அக்காட்சியில் பலர் விரக்தி அடைந்துமாற்று கட்சிகளுக்கு தாவினர். அதைத்தொடர்ந்து திமுகவுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கைகோர்த்து  4 சட்டமன்ற உறுப்பினர்களை அக் கட்சி பெற்றுள்ளது. அதில் ஒருவர்தான் சாத்தூர் மதிமுக எம்எல்ஏ ரகுராமன், மாற்றுத்திறனாளி ஒருவருடன் அவர் பேசியுள்ள ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: வெடித்தது சர்ச்சை.. காஞ்சிபுரத்தில் இரண்டு நாட்கள் பிரியாணி கடைகள் மூடும் உத்தரவு வாபஸ்..!

ஊறுகாய் வியாபாரம் செய்துவரும் மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் என்பவர், கடந்த ஜூலை மாதம் எம்எல்ஏ ரகுராமனிடம் தனக்கு மூன்று சக்கர வாகனம் வேண்டும் என மனு கொடுத்துள்ளார்,  மனு கொடுத்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் நிலைமை என்னவென்பதை கேட்பதற்காக எம்எல்ஏவை தொலைபேசியில் அழைத்துள்ளார். எதிர்முனையில் பேசிய எம்எல்ஏ அவசரப்படாமல் இருங்கள், எந்த வேலையும் உடனே நடக்காது, நான் ஒன்றும் உங்கள் வீட்டு வேலைக்காரன் இல்ல, இந்த வேலையை யாரிடமாகவது கொடுத்து செய்து கொள்ளுங்கள், அதிகாரிகள் யாரும் சொன்ன உடனே செய்துவிட மாட்டார்கள், உங்கள் மனுவை தனியாக எடுத்து வைத்து விடுகிறேன் என கோபத்துடன் பேசினார்.

இதையும் படியுங்கள்: ரஜினியை விட்டு தள்ளு, இனி தமிழகத்தின் முதல்வர் நான் தான்... வைராக்கியமாக பேசும் தமிழருவி மணியன்.

எம்எல்ஏவிடம் உதவி கேட்டு வந்த ஒரு மாற்றுத்திறனாளியிடம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படிதன் பொறுப்பற்ற முறையில் பேசுவதா, வாக்கு கேட்கும் போது உங்கள் வீட்டுப் பிள்ளை, மக்களுக்கு தொண்டு செய்ய வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள், ஆனால் வெற்றி பெற்ற பின்னர் உதவி கேட்டு வரும் மக்களை அவமானப்படுத்துகிறார்கள், இந்த சட்டமன்ற உறுப்பினரை மதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி இதுகுறித்து கூறுகையில், மூன்று சக்கர வாகனம் கேட்டு மனு கொடுத்திருந்தேன், அந்த வாகனம் கிடைத்தால் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் அவரை தொலைபேசியில் அழைத்து நிலவரத்தை கேட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் எம்எல்ஏ ரகுராமன்,  உதவி கேட்டு வரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறேன், எனது கைபேசி எண் எல்லோரிடமும் உள்ளது,  மூன்று சக்கர வாகனம் குறித்து அதிகாரிகளிடம் பேசியபோது 70% மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும், ஆனால் என்னிடம் மனு கொடுத்தவருக்கு 60% மட்டுமே உள்ளது, ஆனாலும் அவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க வலியுறுத்தி இருக்கிறேன், விரைவில் அவருக்கு வழங்கப்படும், ஆனால் அதற்குள் அடிக்கடி மொபைலில் அழைத்து தொந்தரவு செய்து வந்தார் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 

click me!