நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

By Ajmal KhanFirst Published Aug 30, 2022, 11:59 AM IST
Highlights

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பல பிரிவாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், அனைவரும் ஒன்றினைந்து தேர்தலை சந்திப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகார மோதலும் அதிமுகவும்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள விரிசல் இன்னும் ஒட்டாமல் தான் உள்ளது. 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தால் அதிமுகவில் ஏற்பட்ட முதல் பிளவு இதனையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல நேரிட்டதால், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்திய இபிஎஸ் அணி மீண்டும் ஒன்றினைந்தது.அதே வேளையில் சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைக்க நேரிட்டது.  இதனையடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இரட்டை தலைமைக்கு தொடர் தோல்வியே ஏற்பட்டது. இந்தநிலையில் மீண்டும் அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடரந்த வழக்கு தனக்கு சாதகமாக வந்த நிலையில், மீண்டும் அனைவரும் ஒன்றினைந்து தேர்தலை சந்திப்போம். அப்போது தான் அதிகாரத்தில் உள்ள திமுகவை வீழ்த்த முடியும் என ஓபிஎஸ் கூறியிருந்தார். இந்த கருத்தை டிடிவி வரவேற்ற நிலையில், இபிஎஸ் தரப்பு நிராகரித்துவிட்டது.

ஒற்றுமை ஓங்கட்டும், வெற்றி கிட்டட்டும், அன்பும், அமைதியும் நிலவட்டும்- ஓபிஎஸ் அறிக்கை

ஒன்றிணைந்து சந்திப்போம்

இந்தநிலையில் ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு பதில் அளித்த டிடிவி தினகரன், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வம் கூறி வருகிறார். அது சரியான கருத்தாகும். அவரவர் அவரவராக இணைந்து தி.மு‌.க என்ற தீய சக்தியை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றி விடுவதற்கு எது சரியான வழியோ அதை செயல்படுத்துவோம் என தெரிவித்தார். மேலும்   நேற்று வரை நடந்ததை மறந்து விட்டு எல்லாம் நல்லவைக்கே, நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் செயல்பட வேண்டும். அவரவர் அவரவராக இருந்து செயல்பட வேண்டும் என்பதை தான் நான் அனைவருக்கும் கூறுகிறேன்.  யாரும் யாருடனும் இணைய வேண்டாம் . அனைவரும் இணக்கமாக இருந்து செயல்பட வேண்டும். தேர்தலில் ஒன்று சேர்ந்து சந்திக்கலாம். அதிகம் பாதிக்கப்பட்ட நாங்களே பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ளும் நிலையில் அவர்கள் பழயதையே நினைத்துக் கொண்டிருக்க கூடாது. எனவே பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

டைவர்ஸ் கேட்டு டார்ச்சரா..? ப்ளாக் மெயில் பன்னுகிறேனா..? தீபாவின் புகாருக்கு திடீர் விளக்கம் அளித்த மாதவன்

click me!