ரஜினியை விட்டு தள்ளு, இனி தமிழகத்தின் முதல்வர் நான் தான்... வைராக்கியமாக பேசும் தமிழருவி மணியன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 1:19 PM IST
Highlights

இனிய ரஜினி வருவார், அவர் வருவார்,  இவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்க்க போவதில்லை, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நானே முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து விட்டேன் என ரஜினிகாந்தின் நண்பர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்

இனிய ரஜினி வருவார், அவர் வருவார்,  இவர் வருவார் என்று யாரையும் எதிர்பார்க்க போவதில்லை, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து நானே முதல்வர் வேட்பாளராக களம் இறங்க முடிவு செய்து விட்டேன் என ரஜினிகாந்தின் நண்பர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். பிறரை நம்பி ஏமாந்தது போதும், தன் பின்னால் இருக்கும் மூன்று லட்சம் தொண்டர்களை ஆதாரமாக வைத்து தமிழகத்தில் காமராஜர் கொள்கைகளை பேசி அரசியல் செய்ய முடிவு செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வருகிறார்.. அதோ வருகிறார்.. என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது ரசிகர்களை கூட்டியே தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை எனவே நிச்சயம் நான் வருவேன், போர் வரும்போது களம் காண்போம் என்று தனது  ரசிகர்களை உசுப்பேற்றினார் ரஜினிகாந்த், ஆனால் அவரின் அறிவிப்பு அறிவிப்பாகவே சில நாட்கள் இருந்தது, பின்னர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்டம்தோறும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்களுடனான கூட்டத்தை அடிக்கடி நடத்தி வந்தார் அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என காலம் கடத்தி வந்த ரஜினிகாந்த், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்:  Shashi Tharoor : congress:காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி? ராகுல் காந்திக்கு எதிராக போட்டியா?

அரசியலுக்கு வராமல் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த முதல் ஆள் ரஜினிகாந்த்தாகத்தான் இருக்கும் என்று அப்போது பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். ரஜினி கட்சி தொடங்கும் போது அவருக்கு அரசியல் ஆலோசகராகவும் அக்கட்ச்சியின் மேற்பார்வையாளராகவும் இருப்பார் என்று ரஜினியால் தமிழருவிமணியன் நியமிக்கப்பட்டார், இந்நிலையில்தான்  ரஜினிகாந்தின் முடிவால் தமிழருவி மணியன் நிலைகுலைந்து போனார், அதன் விரக்தியில் தனது காந்திய மக்கள் இயக்கத்தை கலைத்த தமிழருவு, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  சாகும் வரை அரசியல் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்றும் தனது அறிக்கையில் வேதனை தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:நாடாளுமன்ற தேர்தலை ஒன்றிணைந்து சந்திக்கலாம்..! ஓபிஎஸ், இபிஎஸ் அணிக்கு டிடிவி தினகரன் திடீர் அழைப்பு

ஆனால் கடந்த சில  மாதங்களுக்கு முன்னர் அரசியலில் நான் எடுத்த முயற்சிகள் வீணாகி போனதால் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக அரசியலை விட்டு விலகி நிற்பதாக நான் முடிவு எடுத்தது மிகப்பெரிய இமாலயத் தவறு என்பதை நான் உணர்ந்து விட்டேன், எனவே தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர மீண்டும் அரசியலுக்குள் நுழைகிறேன், அதற்காக காந்திய மக்கள் இயக்கம் என்றிருந்த தனது இயக்கத்தை காமராஜர் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றுவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில்தான் தனது  காமராஜர் மக்கள் இயக்கத்தின் 3 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாகவும், அவர்களை வைத்து அரசியல் பயணத்தை தொடங்குவதாகவும் தமிழருவி மணியன் பேசிவருகிறார்.

இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர்இது குறித்து பேட்டி கொடுத்துள்ளார், அதில், இவர் வருவார், அவர் வருவார்என்று யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை., நானே களத்தில் இறங்க முடிவு செய்து விட்டேன் என கூறியுள்ளார். அந்த பேட்டியில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் இதுவரை பல கூட்டணிகளுக்கும், அதன் வெற்றி தோல்விகளுக்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன், அதிமுக திமுக என்ற இரண்டு கட்சிகளுக்கு மாற்று சக்தியை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்றே பல ஆண்டுகளாக முயன்று வருகிறேன், அதில் நான் எடுத்த  முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றாலும் அதற்கான செய்கையில் நான் உறுதியாக இருந்து வருகிறேன்.

காந்தியின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டுமென நாட்டிலேயே கட்சி நடத்துகிற ஒரே நபர் நானாகத்தான் இருப்பேன், காந்தியை மக்களுக்கு கடத்துவதில் சிக்கல் இருக்கிறது, ஆனால் இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் நெருக்கமான காமராஜரை கொண்டு சேர்ப்பதில் எந்த தடையுமில்லை, அதனால்தான்  காந்திய மக்கள் இயக்கத்தை காமராஜர் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளேன், காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம், கனவு, அது நாளையே நடக்கும் என்று நான் கூறவில்லை, எனக்குப் பின்னரும் அது நடக்கலாம். 

எதிர்கால சந்ததியினர் அதனால் பயனடைவார்கள், இனி இவர் வருவார் அவர் வருவார் என்று நான் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது, நானே களத்தில் இறங்க முடிவு செய்துவிட்டேன், ரஜினி முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, நான் தான் முதலமைச்சர் வேட்பாளர்  என்ற முடிவில் தான் நான் இந்த பயணத்தை ஆரம்பித்து இருக்கிறேன். நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று சொல்லியும் என்னை நம்பி 3 லட்சம் தொண்டர்கள் நான்தான் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். எனவே அவர்களை வைத்து எனது லட்சிய பயணத்தை நான் நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

click me!