
மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையத்தின் கணக்கின்படி, 622 ஜிலா பரிஷத் மற்றும் 6,158 பஞ்சாயத்துத் தொகுதிகளில், 31,836 கிராம் பஞ்சாயத்துகள் உட்பட, அனைத்திலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தது
அதன்படி மேற்கு வங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் இன்று நடந்து வருகிறது. தேர்தல் தொடங்கிய மூன்று மணிநேரத்தில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு பல இடங்களிலும் வன்முறை சம்பவம் நடந்துள்ளதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன.
வன்முறை சம்பவத்தினால் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தலில் வாக்களிப்பு எண்ணிக்கை 26% மட்டுமே உள்ளது.
கூச் பிகார் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சுமார் 71500 ஆயதமேந்திய வீர்ர்கள் ஓட்டுச்சாவடியை கண்காணித்து வருகிறார்கள்.