
2G வழக்கின் முதல் கட்டத் தீர்ப்பு, திமுகவுக்கு சாதகமாக வந்த தேதியிலிருந்து,
ஆ. ராசா காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கை, மாவட்ட வாரியாக
கூட்டம்போட்டு, நார் நாராக கிழிக்கிறார் ! '' மன்மோகன் சிங், நடந்த தவறுக்கு,இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்டார்...'' என்கிறார்!
ஆனால், ராசா என்னதான் கூட்டம் போட்டு அசிங்கப்படுதினாலும் தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பிலிருந்து, ஒருத்தரும் மூச்சுவிடவில்லை!
பேசுகின்றனர் நீங்க என்னதான் சொன்னாலும் எங்களுக்கு காதுகேட்காது திமுகவை விட்டாள் வேடு நாதி இல்லை என பவ்யமாக இருக்கின்றனர்.
திமுகவின் இப்போதைய கூட்டணி செட்-அப், ரீ செட்-அப் ஆகப்போகிறது!
ஆமாம், பாமக, தமாகா போன்ற கட்சிகள்,திமுக கூட்டணிக்கு
வரப்போகிறது! இதில் ஏற்கனவே CPI, CPI [M], பொன்குமார்
எல்லாம் இருக்கிறார்கள்.
நடவடிக்கைகளை Agencyகள் வழியாக தெரிந்துகொண்டு, அவர்களாக
வெளியேற்றும் முன், காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க
முடிவு செய்து, திருமாவளவன் முன்னிலையில் பூஜையும் போட்டுவிட்டனர் !
திமுக கூட்டணிக்கு பாமக வருவதை அறிந்துதான்,திருமா, நல்ல ஏற்பாட்டோடு,
இடத்தை காலி செய்கிறார்! திமுகவை சமாளிக்கும் திறன் வாய்ந்த தலைவரை காங்கிரஸ் தேடிக்கொண்டு இருக்கிறது! அந்த லிஸ்டில் இருப்பது 1. பீட்டர் அல்போன்ஸ் 2. டாக்டர் செல்லகுமார் 3. ப சிதம்பரம் 4. EVKS இளங்கோவன் ஆகிய நால்வரில் ஒருவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக விரைவில் நியமனம் ஆவார்.
தலைமை காங்கிரசின் விருப்பம் EVKS இளங்கோவன் என்று, காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளரான நடிகை குஷ்பூவின் வட்டாரம் கூறுகிறது. புதிய சூழலில், இளங்கோதான்,திமுகவை எதிர்கொள்ளும் சக்தி வாய்ந்த 'FITTEST' தலைவர் என்று, காங்கிரஸ் தலைமை நினைக்கிறது! ஆமாம் அதில், நியாயமும் இருக்கிறது !
தமிழ்நாட்டில் மூன்றாவது கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்கும் !இந்தக் கூட்டணியில், டி டி வி தினகரன் கண்டிப்பாக இருப்பார் ! எனவே, தேர்தல் செலவுக்கு பஞ்சம் இருக்காது! அரசியல் தட்ப - வெப்பம் அறியாமல்,
காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும் என்கிறார், திருநாவுக்கரசு!