
14 பக்கங்கள் கொண்ட வரைவு திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் நகல் நான்கு மாநில அரசுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கைவிடுத்துள்ளார்
அரசியல், தேர்தல் லாபத்துக்காக தமிழகத்தை வஞ்சித்தது மத்திய அரசு கர்நாடக தேர்தல் முடிந்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிகவே மத்திய அரசு காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாளையே அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். அனைத்து விவசாய அமைப்புகளையும் அழைக்க வேண்டும்.
முழு அதிகாரமிக்க வாரியமே வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு வாரியத்துக்கு மாற்றாக எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாது.
திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர். மே-16ல் தனது வாதங்களை திருத்தமாக எடுத்து வைக்க வேண்டும். தமிழக அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்