ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் - ஆதரவு கரம் நீட்டும் முக ஸ்டாலின்...

 
Published : May 15, 2017, 07:53 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் - ஆதரவு கரம் நீட்டும் முக ஸ்டாலின்...

சுருக்கம்

Welcome to Rajini Politics by Supporting stalin

ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன் எனவும் அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது விருப்பம் எனவும் திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 5 நாட்கள் வரை தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தார்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டேன் என கருத்து தெரிவித்தார்.

இதற்கு ரசிகர் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பலத்த வரவேற்பு கிட்டியது.

இந்நிலையில், திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரஜினி அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகளை போல நானும் வரவேற்கிறேன்.

ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவரது சொந்த விருப்பம்.

ரஜினி அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்தினை சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!