போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை அரசியலாக்குகின்றனர் - திசை திருப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர்...

 
Published : May 15, 2017, 06:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:36 AM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை அரசியலாக்குகின்றனர் - திசை திருப்பும் அமைச்சர் விஜயபாஸ்கர்...

சுருக்கம்

The politics of the transport workers are politicized by vijayabaskar

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை அரசியலாக்கி திசை திருப்புவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவை தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் போக்குவத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொழிலாளர்களுடன் 5 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் நேற்று  முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் தனியார் பேருந்துகளின் கட்டண கொள்ளை ஆரம்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :

வெளியூர்களில் இருந்து 1000 தனியார் பேருந்துகள் சென்னைக்கு வரவழைக்கப்படும்.

வேலை நிறுத்தம் நடைபெற்று வந்தாலும் 75% பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகபடுத்தபட்டுள்ளன.

மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஓட்டுனர், நடத்துனர், பற்றாக்குறை ஏற்படின் தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்கள் நியமனம் செய்யபடுவார்கள்.

வேலை நிறுத்தத்தை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

இதை அரசியலாக்கி போக்குவரத்து தொழிலாளர்களை திசை திருப்புகின்றனர்.

10 தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துள்ளது.

தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!