பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்! மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு கிடையாது! திண்டுக்கல் சீனிவாசன்!

By vinoth kumar  |  First Published Feb 2, 2024, 8:18 AM IST

தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம் ஓ.பன்னீர்செல்வமோ மற்றவர்களோ (பாஜக ) யாரும் எங்களுக்கு யாரும் ஒன்றும் செய்யவில்லை.


தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு இருந்ததால் தான் அதிமுக வேட்டி கட்டி அதிமுக கொடியை பயன்படுத்தி ஆம்பளையாக ஓபிஎஸ் வெளியே வந்தார். தற்போது தெய்வத்தின் தண்டனையாக அதிமுக வேட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: நாங்கள் என்ன இளிச்சவாயர்களா? பாஜகவுடன் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்! திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு தகவல்

இது தெய்வம் தந்த தீர்ப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு கிடையாது. தமிழகத்தில் எங்களுக்கு போதுமான அளவு எம்எல்ஏக்கள் இருந்ததால் தான் நான்கரை ஆண்டு காலம் நாங்கள் ஆட்சி செய்தோம் ஓ.பன்னீர்செல்வமோ மற்றவர்களோ (பாஜக ) யாரும் எங்களுக்கு யாரும் ஒன்றும் செய்யவில்லை.

இதையும் படிங்க: அதிமுகவா.? பாஜகவா.? பாமக யாருடன் கூட்டணி.? பொதுக்குழுவில் எடுத்த முக்கிய முடிவு என்ன.? சிறப்பு தீர்மானம் இதோ

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார். தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் அதன் பின் மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்களது ஆதரவு. பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் எங்களுடைய ஆதரவு  கிடையாது என திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

click me!