அவதூறு பரப்பும் அண்ணாமலையை சும்மா விடமாட்டோம்.. களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்..!

By vinoth kumar  |  First Published Apr 18, 2023, 7:37 AM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர். 


திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14ம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர். இது திமுகவினர் ஊழல் பட்டியல் இல்லை. அவர்களிடம் இருக்கும் சொத்து பட்டியல் மட்டுமே. விரைவில் தமிழ்நாட்டை ஆண்ட அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என அண்ணாமலை கூறியிருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிரபாகரன் கோரிக்கை

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். மேலும், புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்றார். 

இதையும் படிங்க;- ஜெயலலிதாவை A1 ஆகவும்.. சசிகலாவை A2வாக கம்பி எண்ண வைத்தது இந்த சட்டத்துறைதான்.. அமைச்சர் உதயநிதி புகழாரம்.!

இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகையொட்டி 1000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி;- என்னிடம் மட்டும் நிறைய கேள்விகள் கேட்கிறீர்கள். ஆனால் அண்ணாமலையிடம் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டு வருகிறீர்கள். திமுக மீது அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக உதயநிதி அறிவித்துள்ளார்.

திமுக மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம். அண்ணாமலையின் செயல்பாடுகள் காமெடி டைம் என்றும் விமர்சனம் செய்தார். ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி முதல்வர் அனுமதியுடன் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!