வெற்று மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்... ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதிலடி!!

By Narendran S  |  First Published Mar 12, 2023, 7:53 PM IST

பாஜகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். 


பாஜகவை மிரட்டும் வகையில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நான் அரசியலுக்கு வந்தபோது, அண்ணாமலையின் தந்தை கூட பிறந்திருக்கமாட்டார். ஆனால் இப்போது அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகளுக்கு பதில் கூற வேண்டியுள்ளது. திராவிடம் என்ற சொல்லைக் கேட்டால் சிலருக்கு வேப்பம் காயாக கசக்கிறது. ஆகையால் தான் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது திராவிட மாடல் ஆட்சி என்றார்.

இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்... 50க்கும் மேற்பட்ட மார்க். கம்யூ. கட்சியினர் கைது!!

Tap to resize

Latest Videos

ஜெயலலிதாவின் ஆளுமையை, அண்ணமாலை அவருடைய தாய், மனைவியுடன் ஒப்பிட்டு பேசுகிறார். அண்ணாமலை மிரட்டலாம் என்று பார்க்கிறார். நாங்கள் இந்திரா காந்தியை பார்த்தவர்கள், மிசாவை சந்தித்தவர்கள், சர்காரிய கமிஷனை தவிடு பொடியாக்கிய கட்சி என்பதனை அண்ணாமலை உணர்ந்து கொள்ள வேண்டும். பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது என்று பேசியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: பாஜகவுடன் கூட்டணியால் 42,000 வாக்குகள் போச்சு... ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செங்கோட்டையன் பரபரப்பு கருத்து!!

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், திமுக ஆட்சியில், தமிழக மக்கள் மற்றும் மற்ற அரசியல் கட்சித் தொண்டர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களை, பாஜகவினருக்கு கொலைமிரட்டல் விடுத்ததன் மூலம் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே; ஊழல், கமிஷன், லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழகத்தில் உருவாக்க விரும்பும் நாங்கள், இந்த வெற்று மிரட்டல்களுக்கு பயப்படப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 

click me!