நீட் விலக்கு பற்றி மத்திய அமைச்சரை நாளை சந்திக்கிறோம்... தகவல் அளித்தார் மா.சுப்பிரமணியன்!!

Published : Mar 31, 2022, 10:48 PM IST
நீட் விலக்கு பற்றி மத்திய அமைச்சரை நாளை சந்திக்கிறோம்... தகவல் அளித்தார் மா.சுப்பிரமணியன்!!

சுருக்கம்

நீட் விலக்கு குறித்து மத்திய அமைச்சரை நாளை சந்திக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

நீட் விலக்கு குறித்து மத்திய அமைச்சரை நாளை சந்திக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கொரோனாவினால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களில் 168 பேருக்கு ரூ.74.25 கோடி  தற்போது வரை வழங்கப்பட்டுள்ளதுமுன்களப் பணியாளராக பணியாற்றி கொரோனாவால் உயிரிழந்த 2 மருத்துவ பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டது. கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் மக்கள் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கிராமங்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் ரூ.70 கோடியில், 389 நடமாடும் புதிய மருத்துவ வாகனங்கள் கிராமங்களுக்கு செல்ல உள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் 1 மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர் என்ற அடிப்படையில் ஒரு வாகனம் அமைய உள்ளது. இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. மக்களின் பயன்பாட்டிற்கு, முதற்கட்டமாக 100 நடமாடும் மருத்துவ வாகனத்தை வரும் வாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும், மருத்துவ தேவைகளுக்காக மத்திய அரசுக்கு கடிதம், சந்திப்பு என பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை  தமிழக சுகாதாரத்துறை சார்பில், டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்து முக்கிய கோரிக்கைகளை வைக்க உள்ளோம்.

பெரம்பலூர், தென்காசி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரியை அமைக்க அனுமதி கோரவும், மேலும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பயிலும் 50 மாணவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் பயில்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருவதற்காக கோரிக்கையும், அதேபோல் கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரி அமைக்கவும், மேலும் நீரிழிவு நோய்களுக்கான புதிய பட்டப்படிப்பு துறையை அமைக்க, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் தெரிவிக்க உள்ளோம். 27வது மெகா தடுப்பூசி முகாம்கள் வரும் சனிக்கிழமை நடத்தப்படும். தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தடுப்பூசி மையங்கள் செயல்படும். எனவே முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ள 50 லட்சம் நபர்களும் அதேபோல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். மேலும் நீட் தேர்வில் விலக்கு பெற்றால் 100% வெற்றி  இல்லையெனில், மாணவர்களுக்கு போதிய பயிற்சி வழங்க கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!