நாட்டு மக்கள் இடையே பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரதமர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை இல்லா தீர்மானம்:
அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால், பிரதமர் இம்ரான் கான் பதவி விலக மறுத்த நிலையில், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீஸை நாடாளுமன்ற செயலரிடம் கடந்த 8-ம் தேதி எதிர்க்கட்சிகள் வழங்கின. இதனை தொடர்ந்து, இம்ரான் கான் அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த சில கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. 342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்துள்ளார். இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேறினால், இம்ரான் கான் கவிழ்க்கபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
undefined
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தொடர் தொடங்கியதும், ஆளுங்கட்சி எம்.பி. ஒருவர் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவிருந்த சூழலில், எம்.பி.யின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக வரும் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அவை தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர்.
ஆட்சி கவிழ்ப்பு..?
இதனையடுத்து நேற்று முந்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து வரும் 3-ம்தேதி இம்ரான் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அதுவரையில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டும் கூட்டணி கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் இம்ரான் காண் ஆட்சி கவிழ்க்கப்படுவது உறுதியாகியுள்ளது.இதனிடையே பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நான் அரசியல் பின்னணியில் இருந்து வரவில்லை. பாகிஸ்தான் என்னை விட 5 வயதுதான் மூத்தது, நான் சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த நாட்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்தவன், எனது நோக்கம் நீதி மற்றும் மனிதநேயம், மூன்றாவது சுயமரியாதை என்று தெரிவித்தார்
சிறு வயதில் பாகிஸ்தான் உச்சத்துக்கு உயர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. மலேசிய இளவரசர்கள் என்னுடன் படித்தார்கள். மத்திய கிழக்கு நாடுகள் பாகிஸ்தான் பல்கலைகழகங்களுக்கு வந்தன. இவ்வாறு ஒரு காலத்தில் மற்ற நாடுகள் நம்மிடம் இருந்து கற்றுக்கொண்டன. ஆனால் இப்போது பாகிஸ்தானை அவமானப்படுத்துவதை நாம் பார்க்கிறோம் என்று கூறினார்.நான் அரசியலுக்கு வரும்போது யாருக்கும் தலைவணங்கப் போவதில்லை, பாகிஸ்தானை தலைகுனிய விடமாட்டேன் என்று தெளிவாகச் சொல்லிவிட்டேன். கிரிக்கெட் காரணமாக இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட பாகிஸ்தானியன் நான். அமெரிக்காவை எனக்கு நன்றாகத் தெரியும். இங்கிலாந்து எனக்கு இரண்டாவது வீடு போன்றது என்று கூறினார்.
தலைவணங்க போவதில்லை- இம்ரான் கான்:
கடவுள் எனக்கு புகழ், செல்வம், எல்லாவற்றையும் கொடுத்தது எனக்கு அதிர்ஷ்டம். இன்று எனக்கு எதுவும் தேவையில்லை, அவர் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, எங்கள் நண்பர்களாக இருந்த அதே அமெரிக்கா எங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது என்று பேசியுள்ளார்.இதனிடையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திரும்ப பெற்றால் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் என்று ஆளும் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் இராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் இன்று நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். பாகிஸ்தான் சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் ஆன நிலையிலும், பெரும்பாலான நேரங்களில் ராணுவமே ஆட்சி புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.