திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பிசிஆர் கேஸ் போடுங்க.. பரபரப்பை கிளப்பும் கம்யூனிஸ்ட்.. கப்சிப் விசிக, காங்.!

Published : Mar 31, 2022, 10:00 PM IST
திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது பிசிஆர் கேஸ் போடுங்க.. பரபரப்பை கிளப்பும் கம்யூனிஸ்ட்.. கப்சிப் விசிக, காங்.!

சுருக்கம்

ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுருப்பது கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சாதியை சொல்லிய அமைச்சர்

 தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் ராஜகண்ணப்பன். அவர் பதவிக்கு வந்தது முதல் போக்குவரத்துத் துறையைப் பற்றியும் அவரைப் பற்றியும் எதிர்மறையாக செய்திகள் வரத் தொடங்கின. இந்நிலையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன், முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதியைச் சொல்லி திட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ராஜேந்திரன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்து பரபரப்பை கிளப்பினார். இதனையடுத்து ராஜ கண்ணப்பனை போக்குவரத்து துறையிலிருந்து மாற்றி பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

கேள்வி எழுப்பிய பாஜக

ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நல துறைக்கு மாற்றியதும் சர்ச்சையைக் கிளப்பியது. சாதியைச் சொல்லி திட்டிய அமைச்சரை சமூகநீதியைக் காக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றுவதா என்று அதிமுக, அமமுக, நாம்  தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. ஆனால், “அரசு ஊழியர் ராஜேந்திரனை சாதி ரீதியிலாக பேசி அவமானப்படுத்திய அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பட்டியலின மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளதாக கூறும் தொல்.திருமாவளவன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா? கம்மிகளின் கதறல் காணாமல் போனது ஏன்?” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியிருந்தார்.

சிபிஎம் அழுத்தம்

ஆனால், இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மதுரையில் கட்சி மாநாட்டில் பேசும்போது, “அமைச்சர் ராஜ கண்ணப்பன் விவகாரத்தில் முதல்வர் உடனே கவனம் செலுத்தியது பாராட்டுக்குரிய செயல். ஆனால், ராஜ கண்ணப்பனை துறை மாற்றுவது மட்டுமே தீர்வாகி விடுமா? அவர் செய்தது வன்கொடுமை தடுப்பு சட்டக் குற்றம். அந்தச் சட்டத்தின்படி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிஓவிற்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” என்று கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியிருந்தார்.

திமுக அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிகை எடுக்க வேண்டும் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவின் வாக்கு திருட்டு அட்டூழியம்..! ஆர்எஸ்எஸின் அத்துமீறல்..! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேச அட்டாக்..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!