பி டி.ஆரின் மகன் என்பது தான் எனக்கு பெருமை; அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஓபன் டாக்

By Velmurugan s  |  First Published Dec 31, 2022, 10:47 AM IST

நான் எந்த பதவியில் இருந்தாலும் பி.டி.ஆரின் மகன் என்பது தான் எனது பெருமை, அதற்கு மேல் எனக்கு யாரும் எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


மதுரை மாநகர் திமுக சார்பில் புதூர் பேருந்து நிலையம் பகுதியில் அன்பழகன் நூற்றாண்டு விழா, உதயநிதி பிறந்த நாள் விழா, கிறிஸ்துமஸ் விழா என்ற முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், கடந்த ஆண்டு நிதித்துறையில் நாம் எப்படி சாதனை படைத்தோமோ அதே போல் இந்த ஆண்டும் நிதித்துறையில் புதுமை படைப்போம்.

5வது நாளாக தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்; 140 பேருக்கு உடல்நிலை பாதிப்பு

Tap to resize

Latest Videos

undefined

படித்தவர்கள், புதுமையான சிந்தனை உள்ளவர்கள் முறையான இடத்தில் இருந்து, அவருக்கு சரியாக ஊக்கம் கொடுக்கும் பட்சத்தில் சிறப்பான இடத்தை அடைய முடியும். பேராசிரியர் அன்பழகன் எனக்கு தந்தை போன்றவர். என்னை தனியாக அழைத்து நீண்ட நேரம் அறிவுரை கூறுபவர். இருக்கும் தொழிலில் சிறப்பான இடத்தை அடைந்த பின்னரே அரசியலுக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் தான் நான் பல வங்கிகளில் பணியாற்றிவிட்டு அரசியலுக்கு வந்துள்ளேன்.

என் மீது பாசத்தோடு, பரஸ்பர உரிமையோடு நெருங்கி பழங்குபவர் உதயநிதி ஸ்டாலின். அண்ணன் என்ற முறையில் அவருக்கு எந்த வகையில் உதவ முடியுமோ அந்த வகையில் நான் அவருக்கு தேவையான உதவிகளை செய்வேன். தான் சார்ந்த மதத்தை உண்மையாக பின்பற்றுபவர் அனைத்து மதத்தினருடனும் நல்ல அன்புடனும், பண்புடனும் இருப்பார்கள். 

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.. துயரத்திலும் தாயின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்த மகள்கள்..!

பதவி வரும், போகும், ஆனால் மனிதனின் அன்பு மற்றும் பாசத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். உலகில் எனக்கு எந்த பதவி வந்தாலும், போனாலும் பி.டி.ஆரின் மகன் என்பது தான் எனக்கு முதல் பெருமை. அதற்கு மேல் எனக்கு எந்த பதவியும் கொடுக்கவும் முடியாது, பெறவும் முடியாது. அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல கருத்துகளை பின்பற்றுபவன் நான். 

பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் என யாரையும் பிரித்துப் பார்க்காமல் அனைவருடனும் சமமாக பழக வேண்டும். அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

click me!