ஜி.கே.மணியின் மகன் பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Dec 31, 2022, 8:40 AM IST
Highlights

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராகப் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த அக்டோபர் மாதம் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட  இவர் தற்போது தான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின்  இளைஞரணியின் தலைவரும், ஜி.கே.மணியின் மகனான தமிழ்க்குமரன் அப்பொறுப்பில் திடீரென விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி பாமக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக  ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அந்த பொறுப்பு வழங்கப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட  இவர் தற்போது தான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் எழுதிய கடிதத்தில்;- பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணி அணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் ஆவார். லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!