சகோதரி கனிமொழிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா ஸ்டாலின்? போற போக்கில் கொளுத்தி போட்ட சீமான்.!

By vinoth kumarFirst Published Dec 31, 2022, 6:49 AM IST
Highlights

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தேவை  இல்லை என்பதை முதல் நாளில் இருந்தே எதிர்த்து வருகிறேன். பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பிச்சை எடுக்கும் போது பேனா நினைவிடம் தேவையா? எழுதும் பேனாவை கடவுளிடம் வைத்து வழிபடுவது மூடப்பழக்கம் என்றால்? எழுதாத பேனாவை கடலில் வடிவமைப்பது மூடப்பழக்கம் இல்லையா?

தைப்பொங்கலுக்கு மதுவிற்பனைக்கு 400 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். பெண்கள் தாலி அறுத்து கொண்டு செல்லும் நிலைதான் தலைநிமிரலா? என சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்;- மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையமே போதுமானதாக இருக்கும் நிலையில் புதிதாக 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் எதற்கு அதற்கு 4 ஆயிரம் கோடி ஒப்பந்தம் போட்டால் கமிஷன் கிடைக்கும் என்பதற்காகவே அந்த திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் தேவை  இல்லை என்பதை முதல் நாளில் இருந்தே எதிர்த்து வருகிறேன். பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பிச்சை எடுக்கும் போது பேனா நினைவிடம் தேவையா? எழுதும் பேனாவை கடவுளிடம் வைத்து வழிபடுவது மூடப்பழக்கம் என்றால்? எழுதாத பேனாவை கடலில் வடிவமைப்பது மூடப்பழக்கம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை 80 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக மக்கள் சொல்ல வேண்டும். இவர்கள் சொல்ல கூடாது.  தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல் ஏன் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. திமுக ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு. இல்லாத போது ஒரு பேச்சு.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பின்பு வரும் விமர்சனங்களை அவரது செயல்பட்டால் நிரூபிப்பார் என்று முதல்வர் கூறியுள்ளார் அதனை நானும் நம்புகிறேன் என சீமான் கூறியுள்ளார். முதியோர் உதவித்தொகையை நிறுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. மகளிருக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லும் முதல்வர் ஸ்டாலின் சுழற்சி முறையில் இர்ணடரை ஆண்டுகளுக்கு அவரது சகோதரி கனிமொழிக்கு முதல்வர் பதவியை  விட்டுக் கொடுப்பாரா?

தைப்பொங்கலுக்கு மதுவிற்பனைக்கு 400 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்கிறார்கள். பெண்கள் தாலி அறுத்து கொண்டு செல்லும் நிலைதான் தலைநிமிரலா? என சீமான் கொந்தளித்தார். 

click me!