புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டெடுக்கப்படும். உறுதியாக சட்டப் போராட்டத்திலும் நாங்கள் வெல்வோம். எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம்.
ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் மாநாடு கழகத்தின் சட்ட விதியை அபகரித்த சர்வாதிகார கும்பலின் நீக்கும் மாநாடாக அமையும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள், அதிமுக 51ஆம் ஆண்டு விழா, அம்மாவின் பிறந்த நாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழா திருச்சியில் வருகின்ற ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஓபிஎஸ் அணியின் சார்பில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
undefined
இதில், ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், கர்நாடக மாநில அதிமுக நிர்வாகி புகழேந்தி, ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்;- சட்டப்படி எங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கிறது. மக்களை சந்தித்து நாங்கள் தான் உண்மையான அதிமுக என நிரூபிப்போம். ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் மாநாடு கழகத்தின் சட்ட விதியை அபகரித்த சர்வாதிகார கும்பலின் நீக்கும் மாநாடாக அமையும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொண்டர்களுக்கு தந்த உரிமை மீட்டெடுக்கப்படும். உறுதியாக சட்டப் போராட்டத்திலும் நாங்கள் வெல்வோம். எம்ஜிஆர் காலம் முதல் ஜெயலலிதா காலம் வரை அதிமுகவில் பணியாற்றிய அனைவரையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்து இந்த இயக்கத்தை மீண்டும் நடத்துவோம்.
சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைப்போம். எம்ஜிஆர் ஜெயலலிதா அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி இந்த இயக்கத்தை நடத்தினார்களோ அதுபோலவே நாங்களும் நடத்துவோம். சசிகலாவையும் தினகரனையும் நேரில் சென்று அழைப்பீர்களா என்கிற கேள்விக்கு : பொறுமையாக இருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்றார்.
ஒன்றரை கோடி தொண்டர்களின் குரலாகவே நாங்கள் ஒலிக்கிறோம். தொண்டர்கள் நினைத்தால் மீண்டும் இந்த இயக்கத்தில் அனைவரையும் ஒன்றிணைக்க முடியும். கர்நாடக தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம் இரட்டை இலையை நாங்கள் கேட்டு பெறுவோம். பாஜக தேசிய கட்சியாக இருக்கிறது அவர்கள் எண்ணத்தின் படி செயல்படுகிறார்கள் நாங்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி அணிக்கு பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக இருப்பது தோற்றம் தானே தவிர உண்மை அல்ல என ஓபிஎஸ் கூறியுள்ளார்.