ராகுலை பார்த்து மோடி பயப்படுகிறார்; 2024ல் மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் - ஜோதிமணி

By Velmurugan s  |  First Published Apr 11, 2023, 11:18 AM IST

ராகுல் காந்தியை பார்த்து பிரதமர் நரேந்திர பயப்படுகிறார். 2024 தேர்தலில் மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் கரூரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் 5 கேள்விகளை கேட்டார். கேள்வி கேட்ட 2 நாளில் தீ போல நாடு முழுவதும் பரவியது. இதற்கு உதாரணமாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நடந்தது குறித்து கேட்டார். இந்திய பிரதமர், அதானி நிறுவனத்திற்கு மட்டும் தனிப்பட்ட முறையில் செயல்படுகிறார் என கேட்டார். துறைமுகம் தவிர வேறு எந்த துறையிலும் முன் அனுபவம் இல்லாத அதானி குழுமத்திற்கு அனைத்து துறைகளிலும் டெண்டர் எடுக்கிறார். 

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்வி கேட்டார். மக்கள் பணத்தையும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளும் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 30 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. பாஜகவை சார்ந்தவர்கள் 3 இடங்களில் வழக்கு போடுகிறார்கள். நரேந்திர மோடியின் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசியதால், 2 ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதே போன்று பி.ஜே.பி எம்.பிக்கு நடந்துள்ளது. அவர் உச்ச நீதிமன்றத்தில் சென்று தான் தண்டனை அறிவிக்கப்படுகிறது. பதவி பறிக்கப்படுகிறது. ராகுல் காந்தியை பார்த்து மோடி பயப்படுகிறார். குலாம் நபி ஆசாத் இன்னும் அரசு வீட்டில் குடியிருக்கும் போது, ராகுல் காந்தியை மட்டும் திட்டமிட்டு ஒடுக்க நினைக்கிறார்கள். மிகுந்த உறுதியோடு இதனை எதிர்கொள்வோம். 1 மாதம் தொடர் போராட்டம் நடத்தினோம். 

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 1 லட்சம் வீடுகளில் "எனது வீடு ராகுல் வீடு" என ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை தொடங்கி இருக்கிறோம். 2024 மோடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்றார்.

click me!