பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அ.தி.மு.க சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழினிசாமி தொடர்ந்த வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றதலைமை நீதிபதிக்கு , நீதிபதி பிரதிபா.எம்.சிங் பரிந்துரைத்துள்ளார்.
அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில் பொதுச்செயலாளர் பதவி உள்ளிட்ட திருத்தப்பட்ட அ.தி.மு.க சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா.எம்.சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும், எனவும் அங்கீகரித்தால் மட்டுமே தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என தெரிவிக்கப்பட்டது. எனவே புதிய சட்ட விதி தொடர்பாக வழக்கு விசாரணையில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வலியுறுத்தியிருந்தார்.
ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம்.. வாண்டடாக வந்து சிக்கிய இபிஎஸ்? அதிர்ச்சியில் அதிமுக..!
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வழக்கு
அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு மற்றும் இந்த கோரிக்கையின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டும். எனவே 7 முதல் 10 நாட்கள் அவகாசம் வழங்கினால் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை உரிய அதிகாரிகளிடம் கேட்டு கூறுவதாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் கேட்ட 10 நாட்கள் அவகாசத்திற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. கார்நாடக தேர்தல் இந்த மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறியது. இந்நிலையல், இபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் குறுக்கிட்ட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான பிரதான வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக்கூடாது என நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியது.
வழக்கில் இருந்து விலகிய நீதிபதி
இதனையடுத்து அதிமுகவில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார். அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கப்பட்டதாகவும் அந்த பதவி அதிமுக விதிகளுக்கு மாறாக இருப்பதால் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி பிரதிபா.எம்.சிங், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்ற விசாரணையின் போது மனுதாரர் ஒருவருக்கு ஆதரவாக தனது கணவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான மணீந்தர் சிங் ஆஜராகி இருந்தார். எனவே இந்த வழக்கையும் வேறு ஒரு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாகவும், அந்த புதிய அமர்வு நாளை இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் நீதிபதி பிரதிபா சிங் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அமலானது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! மீறி விளையாடினால் என்ன தண்டனை தெரியுமா.?