ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழக அரசு கொரோனா பரிசோதனை, தியேட்டர்களில் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 386 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 2,099 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதாகவும், 186 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த முடிவுகள் வந்த பிறகே எந்த மாதிரியான காய்ச்சல் என்ற விவரம் தெரியவரும்.