நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம் ".. மு.க நினைவிடத்தில் உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 10:31 AM IST
Highlights

இதற்கான கருணாநிதியின் நினைவிடம் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவிடத்தில், " தமிழ் சமுதாய வளர்ச்சிகான் இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம் " என்ற வாசகம் முதலமைச்சர் கையொப்பமுடன் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி உடல்நலக்குறைவு காலமானார். அவரது 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். 

இருப்பினும், கொரோனா 3வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும், பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதற்கான கருணாநிதியின் நினைவிடம் முழுவதும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவிடத்தில், " தமிழ் சமுதாய வளர்ச்சிகான் இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம் " என்ற வாசகம் முதலமைச்சர் கையொப்பமுடன் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருவதால் நினைவிட வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தவிரப்படுத்தப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தை சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் கோபாலபுரம் இல்லம், சி.ஐ.டி காலனி, அறிவாலயம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், முரசொலி அலுவலகம் ஆகிய இடங்களுக்கும் சென்று கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!