அதிமுக 3 முக்கிய புள்ளிகள் ஸ்டாலினிடம் சரணாகதி.. அறிவாலயத்தில் பரபரப்பு.. அதிர்ச்சியில் இபிஎஸ், ஓபிஎஸ்..

By Ezhilarasan Babu  |  First Published Aug 7, 2021, 7:29 AM IST

அப்போது பேசிய முன்னாள் மேயர் புவனேஸ்வரி கூறியதாவது, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெண்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிக்காத காரணத்தினாலும், 


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் திருநெல்வேலி முன்னாள் மேயர் புவனேஸ்வரி தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், மாநில கூட்டுறவு சங்க இயக்குனர் பள்ளிகொட்டை செல்லதுரை ஆகியோர் திமுகவில் இணைந்தனர். 

Tap to resize

Latest Videos

இதனை தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை  சந்தித்தனர்.அப்போது பேசிய முன்னாள் மேயர் புவனேஸ்வரி கூறியதாவது,அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பெண்களுக்கு சரியான முக்கியத்துவம் அளிக்காத காரணத்தினாலும், அதிமுகவிற்கு தற்போது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சரியாக இல்லாத காரணத்தினாலும், அக்கட்சியிலிருந்து விலகி திமுக தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்து உள்ளோம் என கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய தென்காசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், அதிமுகவில் இருந்து  தொண்டர்களும் பெண்களும் அறிவாலயம் நோக்கி வருவார்கள் இனிவரும் காலங்களில் இது தொடரும் என்றார். மாநில கூட்டுறவு இயக்குனர் பள்ளிக்கோட்டை செல்லத்துறை கூறுகையில், அதிமுக மீதான நம்பிக்கை தொண்டர்களுக்கும், மக்களுக்கும் போய்விட்டது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் திமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும் என்றார்.
 

click me!