எத்தனை வழக்கு போட்டாலும் அடித்து நொறுக்குவேன்.. அண்ணாமலை திமுகவுக்கு பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 7:01 AM IST
Highlights

மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் இத்தனை மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்காத ஆளும்கட்சி, இது போன்ற மேலும் பல மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை நடத்த விடாமல் தடுப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை எல்லாம் அச்சுறுத்த நினைக்கிறது.

அப்பாவி விவசாயிகளுக்காக அறப்போராட்டம் நடத்தும்  அரசியல் தலைவர்களை பொய் வழக்குகள் போட்டு அடக்குமுறையால் நினைக்கும் ஆளும் கட்சிக்கு பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர்  கே.அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முமு விவரம் பின்வருமாறு:-

டெல்டா மாவட்ட விவசாயிகள் நலனுக்காக பாஜக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை பொய் வழக்குப் போட்டு அச்சுறுத்த நினைக்கும் ஆளும் திமுக விற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நீர்வரத்து குறைந்து இருக்கும் காவிரியில் புதிது புதிதாக அணைகளை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சிகளுக்கு தடைவிதிக்கக் கோரி மக்கள் நலனுக்காகவும், மக்களின் துயர் துடைக்கவும், மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வெற்றிகரமாக நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆளும் திமுகவை அதிர வைத்துள்ளது. பொது மக்களுக்கு ஆதரவாக போராடும் பாஜக தலைவர்களை பொய் வழக்கு போட்டு அச்சுறுத்தநினைக்கிறது ஆளும் கட்சி. 

மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போராட்டம் இத்தனை மகத்தான வெற்றி பெறும் என்று எதிர்பார்க்காத ஆளும்கட்சி, இது போன்ற மேலும் பல மக்கள் நலன் காக்கும் போராட்டங்களை நடத்த விடாமல் தடுப்பதற்காக, பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களை எல்லாம் அச்சுறுத்த நினைக்கிறது. இதனால் இந்த போராட்டத்தில் பங்கேற்ற 10க்கும் மேற்பட்ட தலைவர்களின் மேலே பொய்யான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி செயல் பொறியாளர் திரு.எம். ராஜசேகரன் என்பவர் பெயரில் ஒரு போலியான புகார் பெறப்பட்டு அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் பண்ணைவயல் இளங்கோ மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என்று விவரித்து முதல் தகவல் அறிக்கை புனையப்பட்டுள்ளது. 

மக்களுக்காகவும் விவசாயிகளுக்கும் தங்களின் கட்சி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள். திருச்சி புறநகர் தலைவர் திரு.அசோக் மற்றும் அறந்தாங்கி நகர தலைவர் இளங்கோ ஆகிய இருவரையும் இரவோடு இரவாக ஒரு சமூக விரோதிகளை கைது செய்வது போல காவல் துறை செயல்பட்டிருப்பது அத்து மீறி செயலாகும். கட்சியில் வேகமும் விறுவிறுப்பும் காட்டும் உற்சாகமான ஊக்கம் மிக்க தொண்டர்களை எல்லாம் இதுபோல பொய் வழக்குப் போட்டு அவர்களை செயல்பட விடாமல் தடுப்பதால் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வேகம் முடங்கி விடும் என்று ஆளும்கட்சி நினைப்பது பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு போகும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் சிந்திப்பது வேடிக்கையாக உள்ளது. 

மாநில நலனுக்காக மக்கள் போராட்டத்தில் பங்குபெறும் எங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்வதையும் அவர்கள் மீது பொய் வழக்குகள் போடுவதையும் பரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் தன் அராஜகத்தை கட்டவிழ்த்து விடுகிறது திமுக. பொது நலனுக்காக பொது மக்களுக்காகப் போராடும் எங்கள் தொண்டர்களின் மனவலிமை மகத்தானது. உங்கள் பொய் வழக்குகளை எல்லாம் பொடி பொடியாய் தகர்த்துவிட்டு புதுப்பொலிவுடன் அவர்கள் மீண்டும் களத்துக்கு வருவார்கள். இன்னும் வேகம் பெறுவார்கள்.
 

click me!