எத்தனை ட்ராமா போட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.. அண்ணாமலையை ஓங்கி அடித்த திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 7, 2021, 10:07 AM IST
Highlights

விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், பாஜகவில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுவார்கள், அக்கட்சிக்கு ஒருமித்த கருத்து என்று ஒன்று இல்லை, அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு கருத்துக்களை கூறுவார்கள்.

இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடிய தலித் சமூகத்தைச் சேர்ந்த வந்தனாவின் இல்லம் முன்பு நடந்த மோசமான சம்பவம் சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். வீராங்கணை வீட்டின் முன்பு இழிவாக நடந்து கொண்ட சாதிவெறியர்கள் மீது சர்வதேச ஹாக்கி அமைப்பு மற்றும் ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகத்தில் விரைவில் எஸ்.சி ஆணையம் அமைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருவதாகவும், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு  ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகள், கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவதை கைவிட்டு மேயர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பதவியும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

அண்ணாமலை தலைமையில் பாஜக உண்ணாவிரதம் நடைபெற்றது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், பாஜகவில் இருக்கிற ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுவார்கள், அக்கட்சிக்கு ஒருமித்த கருத்து என்று ஒன்று இல்லை, அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு கருத்துக்களை கூறுவார்கள். எனவே அவர்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள் என அவர் விமர்சித்தார். அதேபோல இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்த  தலித் சமூகத்தை சேர்ந்த வீராங்கனை வந்தனாவின் இல்லம் முன்பு சாதிவெறியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். 

இந்த சம்பவம் விளையாட்டு துறையில் சாதி அரசியல் எந்த அளவிற்கு ஊடுருவி பரவி உள்ளது என்பதை காட்டுகிறது. சர்வதேச அளவில் இது இந்தியாவிற்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சாதி வெறியர்கள் மீது  ஒலிம்பிக் கமிட்டி மற்றும் சர்வதேச ஹாக்கி அமைப்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். 

click me!