உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்... சிபிஎம் செயலாளர் அதிரடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jul 23, 2021, 9:05 PM IST
Highlights

உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

2019  நாடாளுமன்றத் தேர்தல், தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 2 எம்.பி.களும், சட்டப்பேரவைத் தேர்தலில் 2 எம்.எல்.ஏ.க்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைத்தது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இடையே கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “மாநில உரிமைகளைப் பறிப்பது, புதிய கல்விக் கொள்கை, இந்தியா வரலாற்றை இந்துத்துவ வரலாறாக மாற்றுவது என மக்கள் விரோத செயல்களில் மத்தியில் உள்ள பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளைத் தொடர்ந்து தர மறுத்து வருகிறது. செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியபோதும், அனுமதி அளிக்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் தேர்தல் தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் 9 மாவட்ட ஊரகப் பகுதிகளுக்கு இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை. இது தொடர்பான வழக்கில், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சந்திக்கும்” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

click me!