ஆக்சிஜன் பற்றாக்குறையால் அதிமுக ஆட்சியில் தான் 13 பேர் பலி.. எங்கள் ஆட்சியில் இல்லை.. மாஸ் காட்டும் மா.சு..!

By vinoth kumarFirst Published Jul 23, 2021, 7:30 PM IST
Highlights

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும் என்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசிகள் கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது தமிழகத்தில் 6.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இதுவரை 1 கோடியே 88 லட்சம் தடுப்பூசி போடப்பட்டுள்ளன. 7.5 லட்சம் தடுப்பூசி கூடுதலாக போடப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. ஜிகா வைரஸ் தமிழகத்திற்கு வராமல் இருப்பதற்கு தமிழக எல்லை பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

நியுமோகாக்கல் தடுப்பூசி போடாததால் கடந்த 2 ஆண்டுகளில் நிறைய குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதற்காக நிமோனியா தடுப்பூசி போடும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கி இருக்கிறோம். ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 லட்சம் தடுப்பூசிகளில் தனியாருக்கு 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும் என்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். பெருநிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிதி மூலம் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்த தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்த ரூ.2.17 கோடி நிதி கிடைத்துள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி செலுத்தப்படாது. 

மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழகத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை. ஒரு சில மருத்துவமனைகளில் இருந்த உபகரணங்கள் செயல்பாட்டில் குறைபாடு இருந்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னதான காபந்து ஆட்சியில் தான் அந்த 13 உயிர் இழப்புகள் ஏற்பட்டதாகவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

click me!