ஜெ மரணத்தின் மர்மம் எப்போது விலகும்.? ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு. அரசு அதிரடி.

Published : Jul 23, 2021, 07:35 PM ISTUpdated : Jul 23, 2021, 07:36 PM IST
ஜெ மரணத்தின் மர்மம் எப்போது விலகும்.? ஆறுமுகசாமி  கமிஷனுக்கு மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு. அரசு அதிரடி.

சுருக்கம்

மாறாக பல்வேறு காரணங்களை கூறி விசாரணை தொடர்ந்து காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை இப்போது முடிந்து விடும் அப்போது முடிந்து விடும் என கூறி அடுத்தடுத்து கால அவகாசம் பெற்று  நான்கு ஆண்டுகள் முழுவதுமாக முடிந்து விட்டது. 

ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது, நாளையுடன் கால அவகாசம் முடிவடையும் நிலையில் மேலும் 6 மாத காலம் அவகாசம் நீட்டிப்பு செய்து அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். முன்னதாக அவர் உடல்நலம் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 40 நாடுகளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று  வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக டிசம்பர் 5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.   மருத்துவமனையில் அவரை காணசென்ற அதிமுகவினர் அவர் நலமாக உள்ளார் என்றும், அவர் காலை இட்லி சாப்பிட்டார் இட்லிக்கு சட்னி சாப்பிட்டார் என்றெல்லாம்  கூறிவந்தனர். ஆனால் திடீரென அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அந்த ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் மருத்துவமனையில் ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அவருக்கு சிகிச்சை வழங்கி மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ நிர்வாகம் மற்றும் அதன் மருத்துவர்கள் என பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட போது வெறும் மூன்று மாதங்களில் விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்னும் விசாரணை இறுதி கட்டத்தை எட்டவில்லை.

மாறாக பல்வேறு காரணங்களை கூறி விசாரணை தொடர்ந்து காலநீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. விசாரணை இப்போது முடிந்து விடும் அப்போது முடிந்து விடும் என கூறி அடுத்தடுத்து கால அவகாசம் பெற்று நான்கு ஆண்டுகள் முழுவதுமாக முடியப்போகிறது. தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்துள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்படும் என தகவல்கள்  வெளியாகியுள்ளது. ஆனாலும் இன்னும்கூட விசாரணை இறுதி கட்டத்தை எட்டவில்லை. இந்நிலையில் நாளுயுடன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் முடியவுள்ள நிலையில், மேலும் ஆறு மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   இது 11வது முறையாவது இந்த கால நீட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!