சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்- மாஜி அமைச்சர் பா.வளர்மதி அதிரடி .

By Ezhilarasan BabuFirst Published Mar 8, 2022, 1:26 PM IST
Highlights

இதைக் கேள்விப்பட்டு எடப்பாடிபழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜாவும் சசிகலாவை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அவர் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா தொடர்பாக கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் என முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி கூறியுள்ளார். இதே நேரத்தில் அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில்  மகளிர் தின கொண்டாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வளர்மதி இவ்வாறு கூறினார்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் சமீபகாலமாக அதிகரித்தள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக கருத்து கூறி வருகிறார். சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் ஏற்கனவே கூறியுள்ளார். இது அப்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்த மௌனமாகிப்போனார் ஓபிஎஸ். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் கூடிய அவரது ஆதரவாளர்கள் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது மீண்டும் அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது. 

இதையும் படியுங்கள்: OPS-EPS நேருக்குநேர் சந்திப்பு.. சசிகலாவை பற்றி வாய்திறந்து பேசுவாரா.? பம்முவாரா.? அதிமுகவில் பரபரப்பு.

இதைக் கேள்விப்பட்டு எடப்பாடிபழனிசாமியும் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பி ராஜாவும் சசிகலாவை சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அவர் கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை அடுத்து இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டுள்ளனர். மகளிர் தின விழா கொண்டாட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஓபிஎஸ் இபிஎஸ் கேக் வெட்டி கொண்டாடினர். இந்நிலையில் சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாத இறுதியில் கட்சியின் பொதுக்குழு கூட உள்ளது தொடர்பாகவும்  அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக மகளிரணி செயலாளர், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று உற்சாகத்துடன் அனைத்து மகளிரணி செயலாளர்களும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலம்தொட்டே மகளிர் தினத்தை கேக் வெட்டி அதிமுகவினர் கொண்டாடி வருகிறோம், இந்த நிகழ்ச்சியை அதிமுகவினர் மாவட்ட ஒன்றிய அளவில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மகளிர் அணியினர் அதிகம் உள்ள கட்சி அதிமுகதான். கட்சிக்காக சிறைக்கு சென்று முதல் குரல் கொடுப்பது மகளிரணி தான். அதேநேரத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு வெற்றி தோல்வி என்பது சகஜம்தான். தோல்வியே வெற்றிக்கான வழி காட்டி.

இதையும் படியுங்கள்: தமிழகத்தை கண்டுகொள்ளாத மோடி...? செய்தியாளர்களை சந்திக்காமல் வெளியேறிய அண்ணாமலை...

தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்றார்.  மேலும் பேசிய அவர், தற்போதுள்ள அதிமுகவின் இருபெரும் தலைவர்களை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களிடம்தான் உள்ளது என்றார். சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலா உட்பட அனைவர் தொடர்பாகவும் கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்படுவோம் என்றார்.

அப்போது சசிகலாவை கட்சியில் இணைப்பதை நீங்கள் ஆதரிப்பீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஊடகங்கள் எதையாவது கேட்டு எங்களை கோர்த்து விடாதீர்கள். இதுபோன்ற விஷயங்களில் எங்களை link செய்து விடாதீர்கள். தலைமையின் முடிவுக்கு எப்போதும் கட்டுப்படுவோம் என்றார் பதற்றத்துடன். 
 

click me!