திமுக அரசு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எந்த வகையிலும் சம்மந்தப்படாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுகள் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கு வருகின்ற மார்ச் 11 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அன்று ஜாமீன் நிச்சயம் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.
நில அபகரிப்பு வழக்கில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணை மார்ச் 11ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.
undefined
இதையும் படியுங்கள்: திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் இப்படி நடக்குது.. மீண்டும் வேலையை காட்ட ஆரம்பித்த TTV..!
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கரைஞர் பாபு முருகவேல். திமுக அரசு முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் மீது தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பாக எந்த வகையிலும் சம்மந்தப்படாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவுகள் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார்.
மேலும் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைத்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் இரண்டு வழக்குகளில் ஏற்கனவே ஜாமீன் வழங்கி உள்ளதால் மூன்றாவதாக ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதில் ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜாகிய போது புகார்தாரர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படியுங்கள்: பயங்கர அதிர்ச்சி... கையை கழுத்தில் மாட்டிக் கொண்டு SP வேலுமணி.. அதிமுகவினரை கதறவைக்கும் புகைப்படம்.
இதனால் இடையீட்டு மனுவுக்கு கால அவகாசம் வழங்கி வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு வந்த போது இது சிவில் வழக்கு இதில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் எந்த வகையிலும் சம்மந்தப்படவில்லை என்ற கோரிக்கை வைத்து இருந்தோம்.
அதே அடிப்படையில் தற்போது ஜாமீன் மனு இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்தார். ஜெயக்குமார் சிறையில் இருக்க வேண்டிய முகாந்தரம் இல்லை என மனுவில் குறிப்பிட்டு உள்ளோம், எனவே வெள்ளிக்கிழமை நிச்சயம் ஜாமீன் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்பதாக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்தார்.