அந்த 37 எம்.பி.க்களைவிட இந்த 37 எம்.பி.க்கள் கெத்து... திமுக கூட்டணி கட்சியின் தற்பெருமை!

By Asianet TamilFirst Published Aug 1, 2019, 6:43 AM IST
Highlights

கெயில் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சொன்னார். விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன் உறுதியாக சொன்னார். ஆனால், அவருடைய பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, பாஜக அரசை எதிர்க்க துணிவுக்கூட இல்லாமல் உள்ளனர்.
 

வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இருக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
கொமதேகவின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “ஈரோட்டில் ஆகஸ்ட் 3 அன்று சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை அனுசரிக்க உள்ளோம். திமுக சார்பில் இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டுக்கு  வந்து தீரன் சின்னமலையின் நினைவு நாளில் பங்கேற்க உள்ளார். வேலூரில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோதும், அவர் பங்கேற்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகளைப் பாதிக்கும் திட்டங்களைத்தான் எடப்பாடி அரசு  செயல்படுத்தி வருகிறது. கெயில் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என்று ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சொன்னார். விவசாயிகளுக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வர மாட்டேன் உறுதியாக சொன்னார். ஆனால், அவருடைய பெயரைச் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, பாஜக அரசை எதிர்க்க துணிவுக்கூட இல்லாமல் உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிராகச் செயல்பட்டுவகிறார் எடப்பாடி பழனிச்சாமி.  மின் கோபுர திட்டத்தை விவசாயிகள் பாதிக்காத வகையில்  கேபிள் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக இருந்த 37 அதிமுக எம்பிகளைவிட, தற்போதைய திமுக கூட்டணி எம்.பி.கள் போர்குணம் உள்ளவர்கள். தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.  வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இருக்கும்” என்று ஈஸ்வரன்  தெரிவித்தார். 

click me!