தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 70 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், குறை கூறமுடியாத ஆட்சி நடைபெறுவதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாசிநாயக்கன்பட்டி தனியார் பள்ளி வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்கான கடனுதவி உள்பட ரூ.222 கோடி மதிப்பில் 26 ஆயிரத்து 700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார். மேலும் ரூபாய் 200 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
வேலூரில் உணவு டெலிவரி ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் கைது
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதிஸ்டாலின், பல லட்சம் கோடி ரூபாய் கடனில் விட்டுச்சென்ற பிற்போக்கான ஆட்சிதான் முந்தய காலத்தில் இருந்தது. ஆனால் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 70 விழுக்காடு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கான இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1000 மாத உதவித்தொகை என பல்வேறு திட்டங்களால் மக்களும், மகளிரும் பலனடைந்து வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய பிரச்சினைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; மத்திய அரசு கைவிரிப்பு
இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மீதமுள்ள ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியவில்லை. ஆட்சி குறித்து எந்த வித குற்றசாட்டும் சொல்ல முடியாத நிலையில்தான் எதிர்க்கட்சியினர் தங்களுக்குள்ளாகவே அடித்துக்கொள்கின்றனர். தமிழகத்தில் பாசிசம் இல்லாத முற்போக்கு வழியில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே போலிகளையும், துரோகிகளையும் நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.