டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தலாம்.. ஆனால் கோவில்களில் முடியாது.. அலறவிட்ட அமைச்சர்.

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 11:40 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறை கேட்பு சிறப்பு மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர்.

இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக உள்ள திருக்கோவில் மற்றும் இடங்களில் குறைகளை தெரிவிக்க குறைகேட்பு முகாம் இன்று துவங்கி உள்ளோம்.அதற்காக தொலைபேசி எண் 044-28339999 வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் கணினியில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் அனைத்தும் 15 நாட்கள் ஒருமுறை ஆய்வு செய்ய இருக்கிறேன்.கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருகிறது. முற்றிலும் குறைந்த பிறகு, கோவில்கள் திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். 

திருக்கோவிலில் பக்கதர்கள் வருவதற்கு தான் அனுமதி இல்லை. ஆனால் பூசாரிகள் தினசரி பூஜை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோவில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என்றார். கோவிலில் நகை, சிலை திருட்டு, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதுதொடர்பான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.
 

click me!