விண்ணப்பித்த 3 நாட்களில் மின் இணைப்பு வழங்கிட வேண்டும்.. கரண்ட் போல வந்த உத்தரவு.. அலறும் அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 11:21 AM IST
Highlights

மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகம் முழுவதும் மின் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத  காரணத்தினால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படுவட்டு வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், மின்சாரத்துறை சார்பில் 10 நாட்களுக்கு தீவிர பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பராமரிப்பு பணி மேற்கொள்ள தினசரி பகுதி வாரியாக மின்தடை செய்யப்படும் இடங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்பெட்டிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும், நுகர்வோரின் குறைகளுக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

எந்த விண்ணப்பத்தையும் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது.நுகர்வோரின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படுவதை தலைமைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். நுகர்வோரின் குறைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு வழங்காவிட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கும் 3 நாட்களுக்குள் இணைப்பு வழங்கிட வேண்டும்.மின்வாரிய ஊழியர்களுக்கு, விநியோக இயக்குநர் உத்தரவு.
 

click me!