உள்ளாட்சி அமைப்புகள் கூண்டோடு கலைப்பு..! மீண்டும் புதுத் தேர்தல்..! மு.க.ஸ்டாலின் அதிரடி வியூகம்.!

By Selva KathirFirst Published Jun 25, 2021, 11:16 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் முதலில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிறகு ஜெயலலிதா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என இரண்டாக பிரித்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடைபெற்றது. 

கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடைபெற்ற நிலையில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் புதிதாக உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தி முடிப்பது என்கிற புதிய வியூகத்துடன் மாவட்டச் செயலாளர்களை மு.க.ஸ்டாலின்  சந்தித்து உள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் முதலில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிறகு ஜெயலலிதா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திமுக தொடர்ந்த வழக்கால் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு நீண்ட போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என இரண்டாக பிரித்து தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு, ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டுமே நடைபெற்றது. நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை. இதே போல் புதிததாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் எந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படவில்லை.

இதே போல் ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக பரஸ்பரம் 50 சதவீத இடங்களை வென்றன. இதனால் எந்த கட்சிக்கு அதிக லாபம் என்கிற கேள்வி எழுந்தாலும் அதற்கு பதில் கிடைக்கவில்லை. கவுன்சிலர் பதவிகளை திமுக பெரும்பான்மையாக வென்ற இடங்களில் அமைச்சர்களின் தலையீடு காரணமாக தலைவர் பதவிகளை அதிமுகவினர் கைப்பற்றினர். இப்படி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு பாதகமான சில விஷயங்கள் நடந்தன. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே போல் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் ஒன்பது மாவட்டங்களில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆறு மாதங்கள் அவகாசமும் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அன்றைய தினமே மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பெரியகருப்பனுடன் ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த அன்றே ஸ்டாலின் இவ்வளவுஅவசரமாக அந்த ஆலோசனையை நடத்தியதற்கு காரணமே உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று அவருக்கு இருக்கும் பேரார்வம் தான் என்கிறார்கள். மேலும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பதிலும் ஸ்டாலின் திடமாக இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கடந்த ஆட்சியை போல் ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்புற உள்ளாட்சித் தேர்தல் என்றெல்லாம் பிரிக்காமல் கலைஞர், ஜெயலலிதா இருந்த போது நடப்பது போல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் நினைக்கிறார்.

அதே சமயம் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரும் கணிசமாக வென்றுள்ளனர். எனவே உள்ளாட்சி அமைப்புகளை கூண்டோடு கலைத்தால் அவர்களும் பாதிக்கப்படுவர். ஏனென்றால் அவர்களுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் வரை பதவிக் கால உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்? கட்சிக்காரர்கள் அதிருப்தி இல்லாமல் எப்படி நடத்துவது என்பது குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்களை சந்தித்தள்ளார் மு.க.ஸ்டாலின். மாவட்டச் செயலாளர்களை பொறுத்தவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரேடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு வென்றவர்களுக்கு மறுபடியும் உறுதியாக வாய்ப்பு கொடுக்கப்படும் என்கிற உறுதிமொழியுடன் உள்ளாட்சி அமைப்புகளை கலைக்கலாம் என்று மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினுக்கு உறுதி கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஆளும் கட்சியாக இருப்பதால் எளிதாக தேர்தலில் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும் மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் தொடரலாம் என நினைப்பார்கள் என்றும் எடுத்துக்கூறியுள்ளனர். இதனை அடுத்து உள்ளாட்சித்தேர்தலில் தீவிரம் காட்டி வரும் ஸ்டாலின் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்த உடன் உள்ளாட்சித் தேர்தலை அறிவிப்பார் என்கிறார்கள்.

click me!