மாநில அரசின் அதிகாரத்தை மொத்தமாக ஆட்டயப்போட பார்க்கிறது மத்திய அரசு.. அலறும் திமுக அமைச்சர்..

By Ezhilarasan BabuFirst Published Jun 25, 2021, 11:01 AM IST
Highlights

தமிழக முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் சட்ட மசோதா நிறைவேற்றப்படாது என மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

மாநில அரசுகளின் கட்டுபாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்ட மசோதா குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் எல் மண்டாவியாவுடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கானொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, நாட்டில் உள்ள சிறு துறைமுகங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், இப்புதிய வரைவு மசோதா மாநில அரசின் முழு அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கூடிய வகையில் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்களின் கனவுத் திட்டம் சேது சமுத்திர கால்வாய் திட்டம். இந்த திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தூத்துக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி துறைமுகத்தை சரக்கு மாற்று முனையாமாக மாற்றுவதற்கு விரிவாக்கம் செய்ய மிகப் பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் ஒன்றிய அரசு விரிவாக்கத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
 

click me!