ஸ்டாலினை இயக்க வைப்பதே நாங்கள் தான்... அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி சரவெடி..!

By vinoth kumarFirst Published Nov 26, 2020, 2:08 PM IST
Highlights

அடுத்த புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த புயலை எதிர்கொள்ளவும் தமிழக அரசு தயாராக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு அறையில் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மேற்க்கொள்ளபட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்கூட்டியே திட்டமிட்டு எடுத்ததால் மிக பெரிய பாதிப்பு ஏற்படாமல் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த புயலை பொறுத்தவரை தற்போது வரை எந்த ஒரு மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 3 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என்றார். 

 தமிழகத்தில் தற்போது வரை 3085 சிறப்பு முகாமில் 2,27,317 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் காரணமாக 101 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 26 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சேதமடைந்த பயிர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட வாரியாக பணிகள் துவங்கி உள்ளதாக தெரிவித்த அவர், கணக்கெடுப்பு எடுத்து முடித்த பின்பு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

மேலும், புயல் பாதிப்புகளை முதலமைச்சர் ஆய்வு செய்வதை பார்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். எதிர்க்கட்சி தலைவரை நாங்கள் தான் இயக்கி வருகிறோம். எங்கள் இயக்கத்தை பார்த்துதான் அவர் இயங்கிக்கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

click me!