மன்னிப்பு கேட்க நாங்கள் என்ன சாவர்க்கரா? பாஜகவின் சட்டையை பிடித்து உலுக்கும் கம்யூனிஸ்ட் எம்.பி.

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 11:53 AM IST
Highlights

இந்நிலையில் மீண்டும் நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.  முதல்நாளில் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு,  3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை நிறைவேற்றி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. 

மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க நாங்கள் என்ன சாவர்க்கர் பரம்பரையா என சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி பினாய் விஸ்வம்  மன்னிப்பு கேட்ட நாங்கள் என்ன சாவர்கரா என்றும் ஒருபோதும் நாங்கள் சாவர்க்கரை பின்பற்ற மாட்டோம்  என பதிலடி கொடுத்துள்ளார். இது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வேண்டுமெனில் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என சபாநாயகர் வெங்கையா நாயுடு கூறியுள்ள நிலையில் எம்பிகள் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளனர். 

கடந்த ஆண்டில் நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 6 எம்பிகள் உட்பட எதிர்க் கட்சியை சேர்ந்த மொத்தம் 12 எம்பிகள்  குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதாவது கடந்த ஜூலை 19 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதலே  பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சியினர் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது. ஆகஸ்ட் 14ஆம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  மேசைகள் மீது ஏறி அறிக்கைகளை தீயிட்டுக் கொளுத்தி களேபரத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் இந்நடவடிக்கையால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ளதாகவும். இதனால் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும் ஜனநாயகத்தில் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு சம்பவத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் சபாநாயகர் வெங்காய நாயுடு கண்ணீருடன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மீண்டும் நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.  முதல்நாளில் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு,  3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை நிறைவேற்றி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ச்சியாக மாநிங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்பிகள் மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகில் தர்ணா போராட்டமும் நடத்த இருக்கதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என சபாயாகரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அதற்கு குறிப்பிட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்டால்  உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்ததாக சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.

ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி எம்.பிக்க்கள் நாங்கள் மக்கள் பிரச்சினைக்காகத்தான் குரல் கொடுத்தோம், அதற்காகதான் எங்களை மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்கவேண்டும்? மன்னிப்பு கேட்பது பாஜகவின் பாரம்பரியம், நாங்கள் சாவர்க்கரின் பள்ளியில் பயின்றவர்கள் அல்ல, மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கரும் அல்ல, எந்த காலத்திலும் நாங்கள் சாவர்க்கரை பின்பற்ற மாட்டோம் என பதிலளித்துள்ளனர். மன்னிப்பு கேட்டால் தான் மீண்டும் அவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்பதில் பாஜக அரசும், மன்னிப்பு கேட்க முடியாது என எதிர்க்கட்சிகளும் பிடிவாதமாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.  

 

click me!