அந்த அமைச்சரால்தான் தர்மபுரியில் தண்ணி குடிக்கிறோம்... புலம்பும் திமுக உடன்பிறப்புகள்..!

By Thiraviaraj RMFirst Published May 15, 2021, 5:47 PM IST
Highlights

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி பெரும் செல்வாக்குடன் இருக்கும் அமைச்சரின் தலையீட்டை தடுத்தால் தான், கட்சி உருப்படும் என உடன்பிறப்புகள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள். 
 

அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி பெரும் செல்வாக்குடன் இருக்கும் அமைச்சரின் தலையீட்டை தடுத்தால் தான், கட்சி உருப்படும் என உடன்பிறப்புகள் வெளிப்படையாகவே பேசிக் கொள்கிறார்கள்.

 

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் இடைத்தேர்தலில் தி.மு.க., சார்பில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த எ.வ.வேலு. வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பின், தன் செல்வாக்கை கிருஷ்ணகிரி, தர்மபுரி வரை நீட்டித்துக் கொண்டார். தமிழகத்தில் இந்த தொகுதிகளையும் தாண்டி திமுகவில் செல்வாக்கை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டே செல்கிறார். 

கடந்த 2016 சட்டசபை தேர்தல், பிறகு நடந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல்களில், இவரது சிபாரிசு இருந்தவர்களுக்கே சீட் கொடுக்கப்பட்டது.  ஆனால், பலரும் தோல்வி அடைந்தனர். 

தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும், தர்மபுரி மாவட்டத்தில், நான்கு பேருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார். ஆனால் அந்த நால்வருமே வெற்றீபெறவில்லை. இதனால், 'எ.வ.வேலு தலையீட்டை தடுத்தால் மட்டுமே தர்மபுரி மாவட்டத்தில், கட்சி மீண்டு எழும்' என மாவட்ட தி.மு.க.,வினர் புலம்புகின்றனர். 

click me!