விமானத்தில் மேற்கு வங்கத்திற்கு தப்பிக்க முயன்ற கொரோனா நோயாளி.. கடைசி நேரத்தில் கொத்தாக தூக்கிய அதிகாரிகள்.

By Ezhilarasan BabuFirst Published May 15, 2021, 4:44 PM IST
Highlights

அப்போது மேற்குவங்க மாநிலத்தை சோ்ந்த சுா்ஜித்(22) என்பவா் இந்த விமானத்தில் ஹைதராபாத் வழியாக கொல்கத்தா செல்ல வந்தாா். அவா் சளி,இருமலுடன் மிகவும் சோா்வாக இருந்தாா்.

மேற்குவங்க கொரோனா வைரஸ் நோயாளி  சென்னை விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையிலிருந்து ஹைதராபாத்திற்கு காலை 9.05 மணிக்கு செல்லும் ஏா்ஏசியா விமானம், இன்று சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 50 பயணிகள் பயணிக்கவிருந்தனா். விமானநிலைய அதிகாரிகள்,பயணிகளை சோதனை செய்து விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தனா். 

அப்போது மேற்குவங்க மாநிலத்தை சோ்ந்த சுா்ஜித்(22) என்பவா் இந்த விமானத்தில் ஹைதராபாத் வழியாக கொல்கத்தா செல்ல வந்தாா். அவா் சளி,இருமலுடன் மிகவும் சோா்வாக இருந்தாா். இதையடுத்து சந்தேகப்பட்ட அதிகாரிகள், அவருடைய மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கிப்பாா்த்தனா். அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாசிடீவ் என்றிருந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, மேற்கு வங்கத்திலிருந்து கட்டிட தொழிலாளியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தவா், தற்போது சொந்த ஊா் திரும்புகிறாா் என்று தெரிந்தது. அதோடு  தான் தங்களுடைய ஊரில் சென்று சிகிச்சைப்பெற்றுக்கொள்வதாக கூறினாா்.

ஆனால் அதிகாரிகள் அதை ஏற்கவில்லை. சுா்ஜித்தின் பயணத்தை ரத்து செய்தனா். அதோடு சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்தனா். சென்னை விமானநிலைய சுகாதாரத்துறையினா் விரைந்து வந்து, பயணி சுா்ஜித்திற்கு கொரோனா வைரஸ் பரவல் பாதுகாப்பு கவச உடையை அணிவித்தனா். அதோடு அவரை தனி ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரம் சாணடோரியம் அரசு நெஞ்சக மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வாா்டுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். அதோடு  உள்நாட்டு விமானநிலையம் பயணிகள் புறப்பாடு பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது. 

 

click me!